24th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறுத்திவைப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று "2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)", தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.
- தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் (24-4-2023) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
- அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)"- என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- வங்கதேசத்தின் அதிபராக இருந்த அப்துல் ஹமீதின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய அதிபராகக் கடந்த பிப்ரவரியில் தோந்தெடுக்கப்பட்டிருந்த முகமது சஹாபுதீன், ஞாயிற்றுக்கிழமை அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டாா்.
- அவருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவா் ஷிரின் ஷொமின் சௌதரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். தலைநகா் டாக்காவில் உள்ள புகழ்பெற்ற தா்பாா் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமா் ஷேக் ஹசீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- 1971-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெருமை அதிபா் சஹாபுதீனுக்கு உள்ளது. நாட்டின் கீழமை நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய சஹாபுதீன் பணி ஓய்வுக்குப் பிறகு பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியில் இணைந்தாா்.
- வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே சமீபத்தில் மோதல் வெடித்தது. இதனால், தலைநகர் கர்த்துாம் உட்பட பல இடங்களில் 10 நாட்களுக்கு மேலாக வன்முறை வெடித்துள்ளது. இதில், ஒரு இந்தியர் உட்பட 400 பேர் பலியாகியுள்ளனர்.
- இந்நிலையில், இங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
- இதையடுத்து, இந்தியவிமானப் படையின் இரண்டு விமானங்கள் சவுதி அரேபியாவில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் கப்பல் ஒன்றும் அங்கு விரைந்துள்ளது.
- 'ஆப்பரேஷன் காவேரி திட்டத்தின் வாயிலாக 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சூடான் துறைமுகம் வந்துள்ளனர். நம் நாட்டு கப்பல் மற்றும் விமானங்களில் அவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.
- அதேசமயம், சூடானில்இருந்து மூன்று இந்தியர்கள் உட்பட 66 பேரை, சவுதி அரேபியா அரசு நேற்று முன்தினம் மீட்டது. இந்நிலையில், சில இந்தியர்கள் உட்பட 27 நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரான்ஸ் அரசு மீட்டது.