Type Here to Get Search Results !

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்த கருத்துக்கணிப்பு 2023 / IIM SURVEY ON MANN KI BAAT SHOW 2023

  • பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்த கருத்துக்கணிப்பு 2023 / IIM SURVEY ON MANN KI BAAT SHOW 2023: பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்து இருப்பதாக ஐஐஎம் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 
  • மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி, தமது எண்ணங்களை நாட்டு மக்களோடு பகிர்ந்துகொள்ளும் மனதில் குரல் நிகழ்ச்சி, கடந்த சில ஆண்டுகளாக அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. 
  • இந்த நிகழ்ச்சி தற்போது 100-வது அத்தியாயத்தை எட்டியுள்ள நிலையில், மனதில் குரல் நிகழ்ச்சி நாட்டு மக்களை எவ்வாறு சென்றடைந்துள்ளது, இந்த நிகழ்ச்சி குறித்த நேயர்களின் கருத்து பற்றி ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) கருத்துக் கணிப்பு நடத்தியது. 
  • இதில் நூறு கோடி மக்களை மனதின் குரல் நிகழ்ச்சி சென்றடைந்து இருப்பதும், ஏதாவது ஒரு அத்தியாயத்தையாவது அவர்கள் கேட்டு ரசித்து இருப்பதும் தெரிய வந்ததுள்ளது.
  • 23 கோடி மக்கள், மனதின் குரல் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக கேட்டு ரசித்து வருவதும், எப்போதாவது கேட்டு ரசித்த 41 கோடி மக்கள் தற்போது ரசிகர்களாக மாறியிருப்பதும் தெரியவந்திருப்பதாக கூறினார். 
  • மத்திய அரசின் அணுகுமுறை மக்கள் நலனுக்கு சாதகமானதாக அமைந்திருப்பதாக 63 சதவீதத்தினரும், தேசத்தை கட்டியமைப்பதற்கான முன்முயற்சியாக இருப்பதாக 60 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். 
  • இந்த நிகழ்ச்சி, பிரஞ்சு, சைனீஸ், இந்தோனேஷியன், திபெத்தியன் உட்பட 11 அயல்நாட்டு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 
  • அகில இந்திய வானொலியில் 500-க்கும் மேற்பட்ட ஒலிபரப்பு மையங்கள் வாயிலாக, இந்த மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
  • 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் மாதந்தோறும் ஒலிபரப்பப்பட்டு வரும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம், இம்மாதம் 30-ம் தேதி காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பப்படுகிறது. 
  • இந்த நிகழ்ச்சி 22 இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் தவிர, 11 அயல்நாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

  • IIM SURVEY ON MANN KI BAAT SHOW 2023: An IIM survey revealed that the Prime Minister's Mind Voice program is reaching 100 crore Indians. On the last Sunday of every month, Prime Minister Narendra Modi shares his thoughts with the people of the country on the Mana Voice programme, which has been telecast on All India Radio for the last few years. 
  • As the show has now reached its 100th episode, the Indian Institute of Management (IIM) at Roth, Haryana conducted a survey on how the Voice of Mind has reached the people of the country and the opinion of the people on the show. 
  • In this, it has been revealed that the Voice of Manat program has reached one hundred crore people and they are listening and enjoying at least one episode.
  • He said that it was revealed that 23 crore people are continuously listening and enjoying the show of Manatin Voice, and 41 crore people who have listened occasionally have now become fans. 
  • 63 percent said that the government's approach is positive for people's welfare and 60 percent said that it is an initiative for nation building. He mentioned that this program is being translated and broadcast in 11 foreign languages including French, Chinese, Indonesian and Tibetan. He informed that this Manat's voice program is being broadcast regularly through more than 500 broadcasting centers on All India Radio.
  • The 100th episode of Prime Minister Shri Narendra Modi's Voice of Mind, which has been telecasting monthly since October 3, 2014, will be telecast on All India Radio and Doordarshan on 30th of this month at 11 am. It is noteworthy that this program is being broadcast in 22 Indian languages and 11 foreign languages apart from English.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel