20th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டெல்லியில் சர்வதேச புத்த மத உச்சி மாநாடு தொடங்கியது
- சர்வதேச புத்த மத உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியது. வெளிநாட்டு அறிஞர்கள், புத்த துறவிகள் கலந்து கொண்ட மாநாட்டில், பிரதமர் மோடி பேசுகையில்,''புத்தரின் உன்னத போதனைகள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற மக்களை பாதித்துள்ளன.
- மக்கள் தங்கள் நலன்களுடன் நாடு மற்றும் உலக நலனுக்கும் முன்னுரிமை அளிப்பது காலத்தின் தேவையாகிறது. ஏழைகள் மற்றும் வளங்கள் இல்லாத நாடுகளை பற்றி உலகம் சிந்திக்க வேண்டும்.
- புத்தர் காட்டிய வழியை இந்தியா பின்பற்றி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு உதவி செய்துள்ளோம். ஒவ்வொரு மனிதனின் வலியையும் தனது வலியாக கருதியது.
- புத்தரின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்க தொடர்ந்து முயற்சி செய்துள்ளோம். நவீன பிரச்னைகளுக்கு புத்த மதத்தில் தீர்வு இருக்கின்றன. அவரது போதனைகள் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வை வழங்குகின்றன.
- உலகம் போர், பொருளாதார ஸ்திரத்தன்மை, தீவிரவாதம், மதத்தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை சந்தித்து வருகிறது'' என்றார்.
- அசாம், அருணாச்சல் பிரதேச இடையே 804 கி.மீ. தூரம் எல்லையை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்கின்றன. இதில் எல்லைப்பகுதியில் உள்ள 123 கிராமங்கள் யாருக்கு சொந்தம் என்பதில் கடந்த 10 ஆண்டுகளக பிரச்னை இருந்து வந்தது.
- இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முன்னிலையில் கடந்தாண்டு ஜூலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு மாநில முதல்வர்களிடையே சுமூகமான முறையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
- இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அசாம் முதல்வர் ஹிந்தா பிஸ்வா சர்மா, அருணச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு ஆகிய இருவரிடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.