Type Here to Get Search Results !

16th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


16th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மெனார்கா செஸ் தொடர் - 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்
  • ஸ்பெயினில் நடைபெற்ற மெனார்கா ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, 3000 யூரோக்களை பரிசாக வென்றுள்ளார் தமிழ்நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டரான குகேஷ்.
  • 9 சுற்றுகள் நடைபெற்ற இந்த செஸ் தொடரில், 8 பேர் பங்கெடுத்தனர். 9 சுற்றுகளில் அனைவருமே 7 புள்ளிகள் பெற்று சமன் செய்திருந்தனர். 
  • இருப்பினும் குகேஷ் மற்றும் மற்றொரு இந்திய வீரர் பிரணவ் இடையே டை பிரேக்கர் புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளருக்கான பிளிட்ஸ் போட்டி நடைபெற்றது.
  • பிளிட்ஸ் டை பிரேக்கரில் பிரணவை 1.5-0.5 என்ற புள்ளிகளில் வீழ்த்தி முதலிடம் பிடித்து, குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். வெற்றி பெற்ற குகேஷுக்கு 3000 யூரோ பரிசாக வழங்கப்பட்டது. 
  • இந்த சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இளம் இந்தியர் என்ற பெருமையும் குகேஷ் பெற்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான "மகாராஷ்டிர பூஷன் விருது
  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2022 ஆம் ஆண்டிற்கான "மகாராஷ்டிர பூஷன்" விருதை டாக்டர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மகாராஷ்டிர மாநிலம் ராய்கரில் இன்று வழங்கினார்.
  • இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel