15th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டி இந்தியா 14 பதக்கங்கள் வென்று அசத்தல்
- கசகிஸ்தான் நாட்டில் உள்ள அஸ்தானா நகரில் ஆசிய கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், நேற்று நடந்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் அனிரூத் குமார் வென்கல பதக்கம் வென்றார்.
- இதன்மூலம் இதுவரை இந்தியா 14 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் 10 வெங்கல பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.
- இதில் அமன் ஷெராவத் 57 கிலோ ஆடவர் பிரிவில் தங்கம் வென்றார். மேலும் ரூபின், அன்டிம் பங்கல் மற்றும் நிஷா தகியா ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவின்படி, மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு (சிஏபிஎப் ) காவலர்கள் (பொதுப் பணி) தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான திரு.அமித் ஷாவின் முயற்சியில், உள்ளூர் இளைஞர்கள் சிஏபிஎப்-ல் சேர்வதற்கும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, வினாத்தாள் பின்வரும் 13 பிராந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் - அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி & கொங்கனி