Type Here to Get Search Results !

இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் (TCWI) பட்டியல் / LIST OF BEST CITIES FOR WOMEN IN INDIA

  • இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் (TCWI) பட்டியல் / LIST OF BEST CITIES FOR WOMEN IN INDIA: இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள், என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் தொழில்துறை, சமூக சமநிலை, பாதுகாப்பு அம்சம், உட்கட்டமைப்பு போன்றவற்றை ஆராய்ந்து அதன் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கலின் பட்டியல் உருவாக்கப்ட்டுள்ளது.
  • டைவர்சிட்டி டைஜஸ்ட் (Diversity Digest) ஆய்வின் பல்வேறு அம்சங்களை முன்வைக்கிறது. மேலும், இந்த பட்டியலில் உள்ள இடங்களில் பெண்களின் திறமைகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையான புரிதலையும் முன்வைக்கிறது. 
  • இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் (TCWI) பட்டியல், இந்தியாவின் முதல் 25 நகரங்களை இரண்டு பிரிவுகளில் வரிசைப்படுத்தியுள்ளது.
  • ஒரு வகை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களையும் மற்றொன்று ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களையும் உள்ளடக்கியது. 
  • இந்த ஆய்வானது பிராந்தியங்களில் உள்ள 111 நகரங்களை சேர்ந்த 783 பெண்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அடிப்படையில் சமூக மற்றும் தொழில்துறை சேர்க்கையின் வெவ்வேறு அளவுகள் மூலம் பகுப்பாய்வு செய்துள்ளது.
  • ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில், முதல் 10 நகரங்கள் தெற்கு இந்திய நகரங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளன என்றே சொல்லலாம். அதில் முதலிடத்தில் இருப்பது சென்னை. 
  • பெண்களுக்கான வசதிகளை வழங்கும் மதிப்பீட்டில் 78.41 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. அதற்கு அடுத்து, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
  • இதேபோல், ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களை கொண்ட இரண்டாவது பிரிவில், முதல் 10 இடங்களில் திருச்சிராப்பள்ளி 71.61. மதிப்பெண்கள் பெற்று முதலிடத்திலும், வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, மங்களூரு, திருவனந்தபுரம், பெலகாவி ஆகிய இடங்களும் பட்டியலில் உள்ளன.
  • ஒவ்வொரு பிராந்தியத்தின்(region) சராசரி மதிப்பெண்களையும் ஒப்பிடும் போது, ​​தெற்கு மண்டலம் சராசரியாக 46.17 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மேற்குப் பகுதி 41.13 மதிப்பெண்களைப் பெற்று பெண்களுக்கு பாதுகாப்பான அதே சமயம் வாய்ப்புகள் அளிக்கும் இடங்களாக இருக்கின்றன.
  • நகரங்களை உள்ளடக்கிய மாநில சராசரியில் கேரளா முதலிடம் பிடித்தது. இதேபோல், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று தென் மாநிலங்கள் அதிக சராசரியுடன் முதல் ஐந்து மாநிலங்களில் உள்ளன. 
  • மேலும் இரண்டு பிரிவுகளிலும் இந்தியாவில் பெண்களுக்கான முதல் 10 சிறந்த நகரங்களில் எட்டு தமிழ்நாட்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பட்டியலில் இந்திய தலைநகரான டெல்லி 41.36 மதிப்பெண்களுடன் 14 வது இடத்தைப் பிடித்துள்ளது. பெண்களுக்கான முதல் 10 நகரங்களில் தேசிய தலைநகர் இடம்பெறாதது ஆச்சரியமல்ல என்று கணக்கெடுப்பு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 
  • கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தலைநகரத்தில் அதிகம் பதிவு செய்யப்பட்டு வருவைத்து இதை வெளிப்படையாக காட்டுகிறது.
  • இரண்டு பிரிவுகளிலும் முதல் 25 இடங்களுக்குள் பல மாநிலங்களின் தலைநகரங்கள் இடம்பெறவில்லை என்றும் அது கூறியது. முதல் 25 இடங்களில் இடம்பெற்றுள்ள மாநில/யூனியன் பிரதேச தலைநகரங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்தவை.
  • குறியிடப்பட்ட 111 நகரங்களில், 47 மட்டுமே தேசிய சராசரியான 37.75ஐ விட அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. ஆய்வில் உள்ள நகரங்களில் கிட்டத்தட்ட 58 சதவிகிதம் தேசிய சராசரியை விட குறைவாக இருந்தது.

ENGLISH

  • LIST OF BEST CITIES FOR WOMEN IN INDIA: It recently released a report on the Best Cities for Women in India. It analyzes the industry, social balance, security aspect, infrastructure etc. and based on its scores, a list of the best cities for women in India has been created.
  • Diversity Digest presents various aspects of the study. Also, it presents an understanding between governments and organizations to harness the talents of women in the areas listed.
  • The Best Cities for Women in India (TCWI) list ranks India's top 25 cities in two categories.
  • One category includes cities with a population of more than one million and the other with a population of less than one million. The study analyzed a survey of 783 women from 111 cities in the regions based on different levels of social and industrial inclusion.
  • With a population of over one million, the top 10 cities are dominated by South Indian cities. Chennai is at the top of it. It has scored 78.41 marks in terms of providing facilities to women. It is followed by Bangalore, Hyderabad, Visakhapatnam, Coimbatore and Madurai.
  • Similarly, in the second category of cities with a population of less than one million, Tiruchirappalli is in the top 10 with 71.61. Vellore, Erode, Salem, Tirupur, Puducherry, Mangalore, Thiruvananthapuram and Belagavi are also in the list with the highest scores.
  • Comparing the average scores of each region, the South region tops the list with an average score of 46.17, followed by the West region with a score of 41.13 as the safest and most empowering places for women.
  • Kerala tops the state average which includes cities. Similarly, the three southern states of Tamil Nadu and Karnataka are among the top five states with the highest average. Also, eight Tamil Nadu cities are among the top 10 cities for women in India in both categories.
  • In this list, the Indian capital Delhi is ranked 14th with a score of 41.36. Not surprisingly, the national capital did not feature in the top 10 cities for women, the survey report noted. Crimes against women have been recorded in the capital for the last few years and this is evident.
  • It also said that several state capitals did not feature in the top 25 in both categories. The top 25 state/UT capitals are from Tamil Nadu, Karnataka, Telangana, Maharashtra, West Bengal, Delhi, Kerala, Himachal Pradesh, Jammu and Kashmir and Odisha.
  • Of the 111 cities indexed, only 47 were found to be above the national average of 37.75. Nearly 58 percent of the cities in the study were below the national average.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel