9th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக சுற்றுலா துறைக்கு ஜெர்மனியில் விருது
- பெர்லின் சர்வதேச சுற்றுலா சந்தையில், தமிழக சுற்றுலாத் துறை அரங்கம் அமைக்கப்பட்டு, தமிழக சுற்றுலா சிறப்புகள், வீடியோ மற்றும் குறும்படங்கள் வாயிலாக விளக்கப்படுகின்றன.
- ஜெர்மன் மொழியில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நுாலையும், சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டார்.
- இங்கு, பசிபிக் பகுதி பயண எழுத்தாளர் சங்க விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான, 'பட்வா' சர்வதேச பயண விருது, தமிழக சுற்றுலாத் துறைக்கும்; இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான, 'பட்வா' விருது, அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.
- விழாவில், சுற்றுலாத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்துாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நேபாளத்தின் தற்போதைய அதிபா் வித்யா தேவி பண்டாரியின் பதவிக் காலம் இந்த மாதம் 12-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அவருக்கு பதிலாக அடுத்த அதிபரைத் தோந்தெடுப்பதற்கான தோதல் வியாழக்கிழமை நடைபெற்றது.
- இதில், நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியாக விளங்கும் நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, சாதாரண பின்புலத்தைக் கொண்ட ராம் சந்திர பௌடேல் போட்டியிட்டாா்.
- அவரை எதிா்த்து முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலியின் தலைமையிலான சிபிஎன் (யுஎம்எல்) கட்சி சாா்பில் சுபாஷ் சந்திர நெம்பாங் போட்டியிட்டாா்.
- 332 நாடாளுமன்ற உறுப்பினா்களும், 550 மாகாணப் பேரவைகளின் உறுப்பினா்களும் இதில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ள நிலையில், 313 எம்.பி.க்கள் மற்றும் 518 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா்.
- இதில், 64.13 சதவீத வாக்குகளுடன் ராம் சந்திர பௌடேல் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, நாட்டின் 3-ஆவது அதிபராக அவா் வரும் 12-ஆம் தேதி பொறுப்பேற்கவிருக்கிறாா்.
- ஒன்றிய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- அதில் பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தரைகளை அமைப்பதற்குப் பதிலாக மிதக்கும் இறங்கு தளங்களை உருவாக்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- இந்த மிதக்கும் இறங்கு தளங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும், நவீனத்துவம் மிக்கதாகவும் நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் உள்ளன.
- இந்நிலையில், தமிழ்நாட்டில் கூடுதலாக தமிழ்நாட்டில் நான்கு மிதவை இறங்கு தளங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்தியாவின் ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்பட உள்ளன.
- மேலும் கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய இடங்களிலும் இந்த இறங்கு தளங்கள் அமைய உள்ளது.
- இதைத்தவிர கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க ஒன்றிய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
- 2023ம் ஆண்டுக்கான டிரோபெக்ஸ் கூட்டு போர் பயிற்சி 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அரபிக்கடல் பகுதியில் நிறைவுபெற்றது.
- இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, கடலோர காவல்படை உள்ளிட்டவை இணைந்து பங்கேற்ற இந்த பயிற்சியில், கடலோர பாதுகாப்பு பயிற்சி.
- கடலோரம் மற்றும் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் பயிற்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அரபிக்கடல், வங்காள விரிகுடாவை உள்ளடக்கிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சுமார் 21 மில்லியன் சதுர கடல்மைல் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது.
- இந்த பயிற்சியில் 70 போர்க்கப்பல்கள், 6 நீர் மூழ்கி கப்பல்கள், 75க்கும் மேற்பட்ட விமானங்கள் கலந்து கொண்டன. இந்த கூட்டு போர் பயிற்சியின் ஒருபகுதியாக கடந்த 6ம் தேதி, இந்தியாவின் முதலாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் கப்பல்படை கமாண்டர்கள் மாநாடு நடைபெற்றது.
- தமிழகத்தின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) வருகிற மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
- இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
- அமைச்சரவை கூட்டத்தில், மார்ச் மாதம் 20ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்க வேண்டிய புதிய திட்டம், அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- முக்கியமாக, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட மகளிர் உரிமைத்தொகையாக பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட சில அறிவிப்புகளை மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- மேலும், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை, ஆளுநர் தமிழக அரசிடம் கேட்டார்.
- அதுகுறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பினார்.
- இதற்கு, ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை' என்று குறிப்பிட்டு உள்ளார்.
- இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் தடை மசோதாவை வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.