Type Here to Get Search Results !

95வது ஆஸ்கர் விருது / 95th OSCAR AWARD 2023

  • 95வது ஆஸ்கர் விருது / 96th OSCAR AWARD 2023: 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்கர் விருதை இந்தியர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். ஆண்டுதோறும் சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கும் திரையுலக கலைஞர்களுக்கும் வழங்கப்படும் உயர்ந்த விருது ஆஸ்கர் ஆகும். 
  • இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருது விழா டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. 
  • இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பிற டெக்னீஷியன்கள் என பலரும் திரளாக கலந்துகொண்டனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள விரிப்பு உபசரிப்பு நடந்தது. 
  • ஆஸ்கர் விருது விழாவில் சிறப்பு தொகுப்பாளராக பங்கேற்க தீபிகா படுகோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் கறுப்பு நிற நீளமான கவுன் அணிந்து ஒய்யாரமாக விழாவில் பங்கேற்றார். 
  • சிறந்த படமாக 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படம் தேர்வு செய்யப்பட்டது. 
  • சிறந்த நடிகருக்கான விருதை பிராண்டன் ஃப்ரஸெர் வென்றார். 'தி வேஹ்ல்' என்ற படத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. 
  • சிறந்த நடிகைக்கான விருதை மிசெல் இயோ, 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படத்துக்காக பெற்றார். மிசெல் இயோ, மலேசியாவை சேர்ந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
  •  'ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரன்ட்' திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. 
  • சிறந்த அனிமேஷன் படம் - குயில்லர்மோ டெல்ட்ரோஸ் பினோச்சியோ 
  • சிறந்த துணை நடிகருக்கான விருது - கி ஹூ குவான் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
  • சிறந்த துணை நடிகை விருது - ஜேமி லீ கர்டிஸ் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
  • சிறந்த ஆவணப் படம் - நாவல்னி
  • சிறந்த தழுவல் திரைக்கதை விருதை வுமன் டாக்கிங் 
  • சிறந்த ஒரிஜினல் திரைக்கதை 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்'
  • சிறந்த இயக்குனருக்கான விருதை டேனியல் குவான், டேனியல் ஸ்ச்சிநெர்ட் ஆகியோர் 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படத்துக்காக பெற்றனர். 
  • சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை 'ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃபரன்ட்' படத்துக்காக ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் பிரெண்ட் பெற்றார்.
  • சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் விருது 'ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்' படத்திற்கும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது 'ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்' படத்திற்கும் கிடைத்தது. 
  • தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியின் கதையை அடிப்படையாக கொண்ட 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த ஆவண படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆஸ்கர் விருதை பெற்றனர். 
  • அதேபோல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதுகளை வென்றனர். 

ENGLISH

  • After 14 years, Indians set a record by winning the Oscars. The Oscars are the highest award given annually internationally to films and screen artists. This year the 95th Oscars ceremony in Los Angeles, USA started at 5.30 am IST at the Dolby Theatre.
  • Many actors, actresses, directors, music composers and other technicians from all over the world participated in this festival. They were given a red carpet treatment.
  • Deepika Padukone was invited to be a special host at the Oscars. She wore a long black gown and attended the ceremony casually.
  • 'Everything Everywhere All at Once' was chosen as the best film.
  • Brandon Fraser won Best Actor. He was awarded for the film 'The Vehl'.
  • Michelle Yeoh won the best actress award for 'Everything Everywhere All at Once'. Michelle Yeoh is a Malaysian actress.
  •   'All Quiet on the Western Front' won the Best International Film Award.
  • Best Animated Film – Pinocchio by Guillermo Deltros
  • Award for Best Supporting Actor - Ki Hoo Kwon (Everything Everywhere All At Ones)
  • Best Supporting Actress – Jamie Lee Curtis (Everything Everywhere All At Ones)
  • Best Documentary – Navalny
  • Best Adapted Screenplay Award for Women Talking
  • Best Original Screenplay 'Everything Everywhere All At Once'
  • The best director award went to Daniel Kwan and Daniel Schinnert for 'Everything Everywhere All at Once'.
  • Cinematographer James Brent won for Best Cinematography for 'All Quiet on the Western Front'.
  • The Best Original Score Award went to 'All Quiet on the Western Front' and the Best Production Design Award went to 'All Quiet on the Western Front'.
  • 'The Elephant Whisperers', a documentary short film based on the story of the Bomman and Belli couple, a tribal tribe who look after elephants in Mudhumalai, Nilgiris district of Tamil Nadu, won an Oscar. The documentary was directed by Karthiki Gunselvez and producer Kuneet Monga who won an Oscar.
  • Similarly, 'Nattu Nathu' from the film 'RRR' won an Oscar in the Best Original Song category. Music composer Keeravani and lyricist Chandra Bose won Oscars.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel