13th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
5 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1816 கோடி பேரிடர் நிவாரண நிதி
- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழுவானது, கடந்த 2022ம் ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பினால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கூடுதலாக ரூ.1816 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- அசாம் ரூ.520 கோடி, இமாச்சலப்பிரதேசம் ரூ.239 கோடி, கர்நாடகா ரூ.941 கோடி, மேகாலயா ரூ.47 கோடி மற்றும் நாகலாந்துக்கு ரூ.68 கோடியும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு மாதம் தோறும் விருதுகள் வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஊக்கப்படுத்தி வருகிறது.
- அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான விருதைப் பெறுவதற்காக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, இங்கிலாந்து அணியின் ஹேரி ப்ரூக் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் குடாகேஷ் மோட்டி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.
- இந்த நிலையில் ஹேரி ப்ரூக்கை பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக ஐசிசி அறிவித்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஹேரி ப்ரூக்கை இங்கிலாந்து அணி களம் இறக்கியுள்ளது. இவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இதேபோன்று மகளிர் பிரிவில் ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்டனர் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் ஆஷ்லே கார்டனரின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. 24 வயதாகும் வலது கை ஆட்டக்காரரான ஹேரி ப்ரூக் இங்கிலாந்து அணியில் இடம்பெற்று கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
- ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறும் என கூறப்பட்டது.
- அதே நேரத்தில் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏதேனும் ஒரு போட்டியில் வென்றால் கூட பைனலுக்கு தகுதிப்பெறும் என்ற சூழலில், முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றிருந்தது.
- இதன்மூலம் ஆஸி., அணி பைனலுக்கு தகுதி பெற்றது.இதனால் 4வது போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
- இந்தியா - ஆஸி., அணிகளுக்கு இடையேயான 4வது போட்டியும், இலங்கை - நியூசி., அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் துவங்கின.இதில், நியூசிலாந்து அணி, இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- இந்த தோல்வியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான பந்தயத்தில் இருந்து இலங்கை வெளியேறி, இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றது. வரும் ஜூன் 7ல் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.