8th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரதமர் மோடி முன்னிலையில் 2-வது முறையாக திரிபுரா முதல்வராக பதவியேற்றார் மாணிக் சாஹா
- வடகிழக்கு மாநிலமான திரிபுரா இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்பட்டது. அங்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
- இந்நிலையில், கடந்த 2-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஒரு இடத்தில் வென்றது.
- திப்ரா மோதா கட்சி பிரத்யோத் கிஷோர் உட்பட 14 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 14 இடங்களில் வென்றது.
- இந்நிலையில், பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில், மாணிக் சாஹா (69) ஒருமனதாக மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அதன்படி, திரிபுராவின் அகர்தலாவில் நேற்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதல்வராக 2-வது முறை மாணிக் சாஹா பதவியேற்றார். அவருடன் பெண் ஒருவர் உட்பட 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அனைவருக்கும் ஆளுநர் சத்யதேவ் நாராயண் அரயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து 'மேகா டிராபிக்யூஸ் -- 1' என்ற செயற்கைக்கோளை 2011ல் விண்ணில் செலுத்தியது.
- பூமியின் பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆராய அனுப்பப்பபட்ட இச்செயற்கைக்கோளின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் என்று சொல்லப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கியது.
- இச்செயற்கைக்கோள் வாயிலாக, காலநிலை மாற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை உடனுக்குடன் அனுப்பி வந்தது. இந்நிலையில் இச்செயற்கைக்கோளின் பணிக்காலம் நிறைவடைந்ததால், இதை செயலிழக்க செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
- இதன்படி ஏற்கனவே திட்டமிட்டப்படி, மிகவும் சவாலான பணியான, செயற்கைக்கோளை பூமியின் வளிமண்டலத்துக்கு கொண்டு வந்ததுடன், மக்கள் நடமாட்டம் இல்லாத பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெற்றிகரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அழித்தனர்.
- சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாகும். மத்திய பட்ஜெட்டில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா பிரதமர் மற்றும் குஜராத் மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் முன்னிலையில் டைகின் பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டைகின் பல்கலைக்கழகம் (Deakin University) குஜராத் மாநிலத்தில் துவங்கப்பட உள்ளது. எம்பிஏ, எம்எஸ் என்ற இரண்டு பட்டப்படிப்புகள் துவங்கப்பட உள்ளன. முழு நேரமாக இரண்டு ஆண்டுகளும், பகுதி நேரமாக நான்கு ஆண்டுகளும் பயிலலாம்.
- 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வகுப்புகளை துவங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று பயிலும் இந்திய மாணவர்கள் நம் நாட்டில் படித்து பணிபுரிய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவு திட்டமாகும்.
- இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இது மிகவும் பயனளிக்கும். குஜராத் மாநிலம், அகமதாபாத் கிப்ட் சிட்டியில் இந்த வெளிநாட்டு பல்கலைக்கழகம் அமையவுள்ளது.