6th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முதல் முறையாக சியாச்சின் சிகரத்தில் பெண் ராணுவ வீராங்கனை நியமனம்
- உலகின் மிக உயரமான போர்க்களமாக சியாச்சின் பனி சிகரம் கருதப்படுகிறது. இங்கு, ஆண்டு முழுவதும், 'மைனஸ் டிகிரி'யில், கடும் குளிர் வாட்டி வதைக்கும். இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, அவ்வளவு எளிதான காரியமல்ல.
- இந்நிலையில் இங்கு ஷிவா சவுகான் என்ற பெண் வீராங்கனை ராணுவ கேப்டனாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். முதன்முதலாக இப்பகுதியில் பெண் வீராங்கனை பணியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
- 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டத் திட்டங்களை திறனுடன் அமல்படுத்துவது குறித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக அரசு ஏற்பாடு செய்துள்ள பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகளின் 9-வது பகுதி இதுவாகும்.
- இக்கருத்தரங்கில் பேசிய பிரதமர், கொவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில் சுகாதாரத்தைக் காண முடியும் என்று கூறினார். வளமிக்க நாடுகளைக்கூடப் பெருந்தொற்று சோதித்ததாக அவர் தெரிவித்தார்.
- தொற்றுநோய் உடல்நலத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தியா அதற்கு மேலாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியதாகக் கூறினார்.
- அதனால்தான் ஒரே பூமி, ஒரே மாதிரியான சுகாதாரம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையே உலகிற்கு உணர்த்தியதாக தெரிவித்தார்.
- இது மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் ஆகிய அனைத்துப் படைப்பினங்களின் ஒட்டுமொத்த உடல்நலன் தொடர்புடையது என்று அவர் கூறினார்.
- வரவிருக்கும் கோடைக் காலத்தில் வெப்பநிலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இல்லத்தில், அவரது தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- அடுத்த சில மாதங்களுக்கான காலநிலை முன்கணிப்பு மற்றும் இயல்பான மழைப்பொழிவு குறித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறையால் பிரதமருக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டது.
- ரபிப் பருவப் பயிர்களுக்கான காலநிலைத் தாக்கம் மற்றும் முக்கியப் பயிர்களின் விளைச்சல் குறித்தும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
- பாசன நீர் விநியோகம், தீவனம், குடிநீர் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அவசர காலங்களில் மாநிலங்களின் தயார்நிலை மற்றும் தேவைப்படும் பொருட்களுக்கான மருத்துவமனை உள்கட்டமைப்பு பற்றிய ஆய்வு குறித்தும் பிரதமரிடம் விவரிக்கப்பட்டது.
- வெப்பநிலை தொடர்பாக ஏற்படும் பேரிடர் தயார்நிலை, தணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.
- இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, வேளாண்துறை, புவி அறிவியல் துறை ஆகியவற்றின் செயலாளர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.