27th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அகமதாபாத், திருவனந்தபுரம் உள்பட ஆறு விமான நிலையங்களை இயக்கி இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஒப்புதல்
- அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, குவாஹத்தி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய ஆறு விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மையின் கீழ், இயக்கி, பராமரித்து, மேம்படுத்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
- 2020-2021 ஆம் ஆண்டில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆறு விமான நிலையங்களின் பரிவர்த்தனையின் விதிமுறைகள், நித்தி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவால் முடிவு செய்யப்பட்டது.
- அதிக போட்டியை உறுதி செய்வதற்கும், ஏலதாரர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கும், பின்வரும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
- விமான நிலைய பராமரிப்பில் முன் அனுபவம் தேவை இல்லை, பங்கேற்கும் நிறுவனம் ஏலம் எடுக்கக்கூடிய விமான நிலையங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை, வருவாயைப் பகிர்வதற்குப் பதிலாக ஏல அளவுருவாக ஒரு பயணிக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
- வேளாண் துறையில் அதிகளவிலான பெண் பணியாளர்களின் பங்களிப்பு இருப்பதாக 2021-22 வருடாந்திர தொழிலாளர் படை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேளாண் துறை சார்ந்த பணிகளில் 62.9 சதவீதம் பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
- இதே போல் உற்பத்தித் துறையில் பணியாற்றுபவர்களில் 11.2 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். வணிகம், உணவு விடுதிகளில் பணியாற்றுபவர்களில் 5.9 சதவீதம் பேர் பெண்கள். மற்ற சேவை சார்ந்த துறைகளில் 13.6 சதவீதம் பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
- தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், தரமான வேலைவாய்ப்பை உருவாக்கவும், முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- பெண்களுக்கு சமமான வேலைவாய்ப்பை வழங்குவதுடன், பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கவும், தொழிலாளர் சட்டங்களில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- குறிப்பாக மகப்பேறு விடுப்பாக 12 முதல் 26 வாரங்கள் வரை வழங்கப்படுதல், 50 மற்றும் அதற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றும் இடத்தில், அவர்களது 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கட்டாயம் பராமரிக்கும் வசதி, போதிய பாதுகாப்பு வசதிகளுடன் இரவு பணிகளில் பெண்களை ஈடுபடுத்துதல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- பெண் பணியாளர்களின் பணி சார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்காக மகளிர் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள், தேசிய மற்றும் மண்டல அளவிலான தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக பயிற்சிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
- அரசுத் துறைகளில் பெண் பணியாளர்களின் பங்களிப்பு குறித்த 2021-22 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தொழிலாளர் படை ஆய்வறிக்கையில், 15 வயதிற்கு மேற்பட்டோர் பெண்களின் பங்களிப்பு அதிகபட்சமாக 19. 1 சதவீதத்துடன் ஹரியானா மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.