25th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பெங்களூருவில் புதிய மெட்ரோ ரயில் நிலையம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டு பகுதியிலிருந்து கிருஷ்ணராஜபுரா வரை 13.7 கி.மீ தூரத்துக்கு ரூ.4,250 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து அவர் புதிய வழித்தடத்தில் பயணம் செய்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த பல தரப்பினருடன் அவர் கலந்துரையாடினார்.
- முன்னதாக கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபுரா மாவட்டத்தின் முத்தேனஹள்ளி அருகே உள்ள சத்யசாய் கிராமத்தில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை (எஸ்எம்எஸ்ஐஎம்எஸ்ஆர்) பிரத மர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதை ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது.
- இந்தக் கல்லூரி இந்தக் கல்வி ஆண்டு முதல் செயல்படுகிறது. மருத்துவக் கல்வியை வியாபாரம் அற்றதாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்குடன், இந்த மருத்துவக் கல்லூரி கிராமப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்வி மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை முற்றிலும் இலவசமாக வழங்கவுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் மற்றும் மதுசூதன் சாய் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பதக்க போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனுபாகர் 20 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
- ஜெர்மனியின் டோரீன் 30 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கமும், சீனாவின் யு ஸியு 29 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். சர்வதேச போட்டியில் மனுபாகர் இரு வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் பதக்கம் பெற்றுள்ளார்.
- டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று 48 கிலோ எடைப் பிரிவு இறுதி போட்டியில் 22 வயதான இந்தியாவின் நீது கங்காஸ், மங்கோலியாவின் லுட்சைகான் அல்டான்செட்செக்கை எதிர்த்து விளையாடினார்.
- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீது கங்காஸ் ஆக்ரோஷமாகத் தனது தாக்குதலை தொடங்கினார். தனது குத்துகளால் திறம்பட செயல்பட்டு லுட்சைகான் அல்டான்செட்செக்கை அதிரவைத்த நீது 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
- 81 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் 3 முறை ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் சவீட்டி பூரா, 2018ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்ற சீனாவின் லினா வாங்குடன் மோதினார்.
- இதில் சவீட்டி பூரா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் சவீட்டி பூரா வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும். 2014-ம் ஆண்டு அவர், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி இருந்தார்.
- மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதுவரை இந்தியா 12 தங்கம் வென்றுள்ளது. இதில் மேரி கோம் மட்டுமே 6 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி இருந்தார்.
- அவரை தவிர்த்து சரிதா தேவி (2006-ம் ஆண்டு), ஜென்னி (2006), லேகா (2006), நிகத் ஜரீன் (2022) ஆகியோரும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தனர். தற்போது நீது கங்காஸ், சவீட்டி பூரா ஆகியோர் தங்கம் வென்று அசத்தி உள்ளனர்.
- மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளர் மற்றும் அலுமினிய ஏற்றுமதியாளரான தேசிய அலுமினியம் நிறுவனம் (நால்கோ), பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் (BARC) இணைந்து BARC B1201 எனப் பெயரிடப்பட்ட பாக்சைட் குறிப்புப் பொருளை (CRM) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
- இது இந்தியாவின் முதல் மற்றும் உலகின் 5-வது சிஆர்எம் ஆகும். BARC B1201 மார்ச் 24-ம் தேதியன்று புவனேஸ்வரில் உள்ள நால்கோ ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையத்தில் மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.