23rd March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆராய்ச்சி வெளியீடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்
- உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் ஆராய்ச்சி மையங்களில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ஆனால் ஆராய்ச்சி தொடர்பான அனைத்திலும் இந்த வளர்ச்சி இல்லை என்பது கவலை அளிப்பதாக, ஆராய்ச்சி கட்டுரைகளை கண்காணிக்கும் க்யூஎஸ் தெரிவித்துள்ளது.
- சர்வதேச அளவில் கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலத்தில் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடுகள் சராசரியாக 22% அதிகரித்துள்ளதாக தரவு நுண்ணறிவு நிறுவனமான சைவால் (SciVal) தெரிவித்துள்ளது.
- இதே காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச சராசரியைப்போல 2 மடங்குக்கும் அதிகமாக (54%) அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- குறிப்பாக கல்வித் துறையில் முன்னேறிய மேற்கத்திய நாடுகளை விடவும் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. ஆராய்ச்சி கட்டுரை வெளியீட்டில் சீனா 45 லட்சத்துடன் முதல் இடத்தில் உள்ளது.
- இதுபோல அமெரிக்கா (44 லட்சம்) 2-ம் இடத்திலும், பிரிட்டன் (14 லட்சம்) 3ம் இடத்திலும், இந்தியா (13 லட்சம்) 4-ம் இடத்திலும் உள்ளன. இதே வேகத்தில் சென்றால் பல்துறை ஆராய்ச்சி வெளியீடுகளில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா விரைவில் 3-ம் இடத்தைப் பிடித்துவிடும்.
- இதுபோல 89 லட்சம் மேற்கோள்களை இந்தியா உருவாக்கி உள்ளது. அதேநேரம் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகளின் தாக்கத்தைப் பொருத்தவரை, நிதி ஒதுக்குவது மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிப்பதில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
- இந்தியாவின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் 52.6% பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடையவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்தியபிரதேசத்தின் போபாலில் ஐஎஸ்எஸ்எஃப் பிஸ்டல், ரைபிள் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
- இதன் 2-வது நாளான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் வருண் தோமர், ரிதம் சங்க்வான் ஜோடி தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் இயன் வெய், லியு ஜின்யாவோ ஜோடியை எதிர்த்து விளையாடியது.
- இதில் வருண் தோமர், ரிதம் சங்க்வான் ஜோடி 11-17 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
- தொடரின் 2-வது நாளின் முடிவில் சீனா 3 தங்கம், 2 வெண்கலத்துடன் 5 பதக்கங்கள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலத்துடன் 2-வது இடம் வகிக்கிறது.
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
- இதையடுத்து, கடந்த மார்ச் 9-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.
- அதன்படி, பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் சட்டமசோதாவை தாக்கல் செய்து, அதை மறு ஆய்வு செய்யுமாறு கோரினார்.
- இறுதியாக, முதல்வர் ஸ்டாலின் சட்டத்தை நிறைவேற்றித் தருமாறு கோரினார். குரல் வாக்கெடுப்பு மூலம், ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
- சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு 75. தற்போது 58 நீதிபதிகள் உள்ளனர். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும், பி.வடமலையை கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.
- மேலும், ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த், தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி தேவராஜூ நாகார்ஜுன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்தும் ஜனாதிபதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.
- இதற்கான உத்தரவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. மூன்று புதிய நீதிபதிகளை நியமனத்தையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.