21st March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி - சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
- இலங்கை கடந்த ஆண்டு முதல் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இலங்கைக்கு பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன.
- மேலும் கடனுதவி கேட்டு சர்வதேச நாணய நிதியத்தையும் இலங்கை அரசு அணுகியது. இது தொடர்பாக இலங்கை அரசுடன் சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது.
- இதனை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் அதாவது ரூ.24.8 ஆயிரம் கோடி கடனுதவி வழங்குவதற்கு திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- முதல் தவணையாக 333மில்லியன் டாலர்கள் ரூ.2727கோடி உடனடியாக வழங்கப்படும். இதனை தொடர்ந்து பல்வேறு தவணைகளாக கடன் உதவியை சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசுக்கு வழங்கும்.
- சீனதைபேயில் ஆசிய கோப்பை வில்வித்தை 'லெக்-1' நடந்தது. ஆண்களுக்கான 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்திய வீரர்கள் சார்பில் ராகுல், ராம்பால் சவுத்ரி மோதினர். இதில் முதல் செட் 'டை' ஆனது.
- அடுத்தடுத்த செட்டில் முந்திய ராகுல் கடைசியில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். ராம்பால் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
- ஆண்கள் 'ரீகர்வ்' அணிகளுக்கான பைனலில் இந்தியா சார்பில் ராகுல், ராம்பால், பார்த் சுஷாந்த் அடங்கிய அணி, சவுதி அரேபியா அணியை சந்தித்தது. இதன் முதல் இரு செட்டை வென்ற இந்தியா 4-0 என முன்னிலை பெற்றது.
- அடுத்த செட்டை இழந்தாலும், நான்காவது செட்டை இந்தியா 1-1 என சமன் செய்தது. முடிவில் இந்திய அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது. மொத்தம் 5 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியா இத்தொடரில் 10 பதக்கம் வென்றது.