Type Here to Get Search Results !

தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 / TAMILNADU ORGANIC FARMING POLICY 2023


  • தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 / TAMILNADU ORGANIC FARMING POLICY 2023: வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் 'தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023'-ஐ (TamilNadu Organic Farming Policy) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
  • ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது அங்கக வேளாண்மை கொள்கையின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2021-2022-ம் ஆண்டுக்கான வேளாண்மை - உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், 'அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து மண்வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய, இயற்கை வேளாண் விளைபொருட்களின் தேவை அதிகரித்துள்ளதோடு விழிப்புணர்வும் அவசியமாகி உள்ளது.
  • இவற்றை கருத்தில்கொண்டு, இயற்கை வேளாண்மை தொடர்பான பணிகளை சிறப்பு கவனத்துடன் செயல்படுத்துவதற்காக, வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப் பிரிவு உருவாக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.
  • அதன் முதல்கட்டமாக, அங்கக வேளாண்மை வரைவுக் கொள்கையை உருவாக்குதற்காக வேளாண்மை - உழவர்நலத் துறை செயலர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் மூலம் வரைவு அங்கக வேளாண்மை கொள்கை, செயல் திட்டம் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழக விவசாயிகள் இடையே அதிகரித்தல், நிலங்களில் ரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, இயற்கை இடுபொருட்களை அதிக அளவில் பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை வழிவகுக்கும்.

கொள்கையின் நோக்கம்

  • தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 / TAMILNADU ORGANIC FARMING POLICY 2023: அங்கக வேளாண்மை கொள்கை மூலம் மண் வளம், வேளாண் சூழலியல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்தல் மற்றும் நிலைத்திருக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவை வழங்குதல், அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அங்கக வேளாண்மை நடைமுறைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
  • அங்கக சான்றளிப்பு முறைகள், நச்சுத்தன்மை பகுப்பாய்வு நெறிமுறைகளை வலுப்படுத்துதல், பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது பண்ணைக்கு அருகில் உற்பத்தி செய்யப்படும் தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடுபொருட்கள் ஊக்குவிக்கப்படும்.
  • மேலும், சந்தை ஆலோசனைகள், சான்றிதழ் ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன் ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது அங்கக வேளாண்மை கொள்கையின் நோக்கங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

ENGLISH

  • TAMILNADU ORGANIC FARMING POLICY 2023: On behalf of the Department of Agriculture - Farmers' Welfare, Chief Minister Stalin yesterday released the 'Tamil Nadu Organic Agriculture Policy 2023' (Tamil Nadu Organic Agriculture Policy) to ensure food security and encourage sustainable organic farming.
  • Promoting exports and increasing farmers' income is stated as the objective of the Organic Agriculture Policy.
  • The financial report of the Department of Agriculture - Farmers' Welfare for the year 2021-2022 states, 'Due to excessive use of chemical fertilizers and pesticides, the number of microbes and earthworms in the soil has decreased drastically and the environment has also been affected.
  • The demand for natural agro products that can provide immunity has increased and awareness is essential.
  • Considering these, it was announced that a separate unit for organic farming will be created in the Department of Agriculture to carry out the work related to organic farming with special attention.
  • In the first phase, an expert committee headed by the Secretary of Agriculture - Agrarian Welfare was constituted to prepare the draft Organic Agriculture Policy. A draft organic agriculture policy, action plan and regulations have been developed by the committee.
  • To increase the importance of organic farming among the farmers of Tamil Nadu, gradually reduce the use of landscape chemical inputs, increase the use of natural inputs, improve soil fertility etc.

OBJECTIVE OF THE POLICY

  • TAMILNADU ORGANIC FARMING POLICY 2023: Organic agriculture policy will take steps to conserve and sustain soil fertility, agro-ecology and biodiversity.
  • Providing safe, healthy and eco-friendly food, creating awareness about organic farming and expanding organic farming practices.
  • Organic certification systems, strengthening of toxicity analysis protocols, inputs such as manure, vermicompost produced on or near the farm will be encouraged.
  • Further, the provision of market advice, certification advice, promotion of exports and increase in farmers' income are said to be the objectives of the Organic Agriculture Policy.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel