15th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அமிருதரஸில் ஜி20 கல்வித் துறை கூட்டம் 2023
- 20 நாடுகள் பங்கேற்கும் கல்வித் துறை தொடா்பான கூட்டம் பஞ்சாப் மாநிலம் அமிருதரஸில் புதன்கிழமை தொடங்கியது. ஜி20 நாடுகள் பங்கேற்கும் கல்வித் துறை தொடா்பான கூட்டம் பஞ்சாப் மாநிலம் அமிருதரஸில் புதன்கிழமை தொடங்கியது.
- ஜி20 கூட்டமைப்பின் கல்வி செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், எதிா்காலத்துக்கான பணிகள் மற்றும் புத்தாக்கங்கள் குறித்து 3 நாள்கள் விவாதிக்கப்பட உள்ளன.
- பல்வேறு கருத்தரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 'வலுவான ஒத்துழைப்பு மூலம் ஆராய்ச்சியைப் பலப்படுத்துதல், புத்தாக்கத்தை மேம்படுத்துதல்' என்ற தலைப்பின்கீழான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
- சா்வதேச சாவல்களுக்கான தீா்வுகளைக் கண்டறிய அரசு கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களுக்கு இடையே காணப்படும் இடைவெளியைக் குறைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- மத்திய உயா்கல்வித் துறை செயலா் கே.சஞ்சய் மூா்த்தி, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநா் கோவிந்த் ரங்கராஜன், ஐஐடி ரோபாா் இயக்குநா் ராஜீவ் அஹூஜா உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.
- இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் ஒத்துழைப்புடன் பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள “அக்ரியுனிஃபெஸ்ட்” எனும் 5 நாள் கலாச்சார நிகழ்வின் தொடக்க விழாவில், மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பங்கேற்றார்.
- இந்த விழாவில், 60 மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள்/ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்/மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 2500க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
- இவர்கள் 18 நிகழ்வுகளில் தங்களின் திறனை வெளிப்படுத்துவார்கள். இசை, நடனம், இலக்கியம், நாடகம், நுண்கலைகள் ஆகிய 5 பிரிவுகளில் இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
- இந்த நிகழ்வில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரண்ட்லாஜெ, கர்நாடக வேளாண் துறை அமைச்சர் திரு பி சி பாட்டீல், ஐசிஏஆர் துணைத் தலைமை இயக்குநர் (கல்வி) டாக்டர் ஆர் சி அகர்வால், துணைவேந்தர் டாக்டர் சுரேஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- பூமி ஆதார் எனப்படும் தனித்துவ நில அடையாள எண்ணை அறிமுகப்படுத்துவதற்கான, 4-வது பூமி சம்வாத் எனப்படும் இந்திய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புவிசார் குறிப்பு பற்றிய தேசிய மாநாட்டை வரும் 17-ந் தேதி, மத்திய நில சீர்திருத்தத்துறை புதுதில்லியில் நடத்துகிறது. மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்.
- மத்திய ஊரக மேம்பாடு மற்றும் உருக்குத்துறை இணையமைச்சர் திரு ஃபக்கான் சிங் குலாஸ்தே, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, மத்திய பஞ்சாயத்துராஜ் துறை இணையமைச்சர் திரு கபில் மோரேஸ்வர் பாட்டீல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர்.
- நில ஆவணங்கள் தரவு ஜனநாயகமாக்கல் மற்றும் மாத்ரிபூமி, எளிதாக வர்த்தகம் புரிதல் மற்றும் எளிதான வாழ்க்கை மேற்கொள்வதற்கு பூமி ஆதாரைப் பயன்படுத்துதல், நில அளவை, மறு அளவை, பூமி ஆதார் பயன்பாடு போன்றவற்றில் தேசிய மற்றும் உலக அளவிலான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகிய தலைப்புகளில் 3 அமர்வுகள் மாநாட்டில் நடைபெறும்.