Type Here to Get Search Results !

தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023 / TAMILNADU FREIGHT TRANSPORT POLICY & INTEGRATED FREIGHT TRANSPORT PLAN 2023

  • தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023 / TAMILNADU FREIGHT TRANSPORT POLICY & INTEGRATED FREIGHT TRANSPORT PLAN 2023: மாநிலத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நம்பகமான, சிக்கனமான, நிலையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு போக்குவரத்துச் சூழல் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போட்டித்திறனை ஊக்குவிக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

முக்கிய கருப்பொருட்கள் (Themes)

  • ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வலுவான போக்குவரத்து உட்கட்டமைப்பினை உருவாக்குதல், குறைந்த செலவிலான மற்றும் உயர்ந்த தரத்திலான சேவைகள் கிடைக்கும் நிலையை ஊக்குவித்தல், ஒற்றைச்சாளர அனுமதி வழங்கும் அமைப்பை உருவாக்குதல், சரக்கு போக்குவரத்து சூழல்அமைப்பின் மீள்திறன் மற்றும் நிலைப்புத்தன்மையை உறுதி செய்தல் (Resilience & Sustainability), புதிய தொழில்நுட்ப உத்திகளைச் செயல்படுத்தல் (New Technology), சரக்கு போக்குவரத்துத் துறையில் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் (Skill Development) ஆகியவை இக்கொள்கையின் முக்கிய கருப்பொருட்கள் ஆகும்.
  • இக்கொள்கையின் மூலம் சரக்கு போக்குவரத்து துறைக்கு, "தொழில் அந்தஸ்து (Industrial Status) வழங்குதல், "ஒற்றை சாளர அனுமதி" (Single Window Clearances) வழங்குதல் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
  • மேலும், சரக்கு போக்குவரத்து துறையில் புதிய தொழில் நுட்ப உத்திகளை செயற்படுத்துதல், திறன் மேம்படுத்துதல், நிலைப்பு தன்மையை (Sustainability) உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கப்படும்.
  • "சரக்கு போக்குவரத்து செயல் திட்டம்" (Logistics Plan) மூலம் மூன்று பெருவழி தடங்களில் மட்டுமே, 50 செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.63,000 கோடி அளவிற்கு செயல் திட்டங்களும், 1.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும்.

ENGLISH

  • Tamil Nadu Freight Transport Policy and Integrated Freight Transport Plan 2023: The policy has been formulated with a vision to promote a reliable, economical, sustainable and integrated freight transport ecosystem and enhanced competitiveness for accelerated economic growth of the state.

Main Themes

  • Creating an integrated and robust transport infrastructure, promoting availability of low-cost and high-quality services, creating a single system for issuing permits, ensuring resilience and sustainability of the freight transport ecosystem, implementation of new technology strategies, capacity building in the freight transport sector. Promotion of skill development is the main theme of this policy.
  • Through this policy, the provision of "Industrial Status" and "Single Window Clearances" have been established for the freight transport sector. Also, implementation of new technical strategies, efficiency improvement and sustainability in the freight transport sector have been established. will be encouraged.
  • Through the "Logistics Plan", 50 projects have been recommended in just three highways. Through this, action plans to the tune of Rs.63,000 crore and employment for 1.6 lakh people will be created in the next ten years.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel