Type Here to Get Search Results !

தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023 / TAMILNADU CITY GAS DISTRIBUTION POLICY 2023

  • தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023 / TAMILNADU CITY GAS DISTRIBUTION POLICY 2023: தமிழ்நாடு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 
  • பன்நோக்கு திட்டங்களை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கவும், மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ள 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கினை அடைந்திட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை எரிவாயுவின் உபயோகத்தை ஊக்கப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பை தமிழகத்தில் விரைவாக அமைக்கத் தேவையான விதிகள், நடைமுறைகளை உருவாக்கவும் இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம் தொழிற்சாலைகள், வாகனப் பயன்பாடு மற்றும் 2.30 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்க இக்கொள்கை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி முதலீடு கிடைக்கும் எனவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமையான எரிபொருளான இயற்கை எரிவாயுவின் உபயோகத்தினை ஊக்கப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பை தமிழ்நாட்டில் விரைவாக அமைக்க தேவையான விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கும் நோக்கத்தோடு இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், வாகன பயன்பாட்டிற்கும், 2.30 கோடி வீடுகளுக்கும் குழாயின் மூலம் இயற்கை எரிவாயு வழங்க இக்கொள்கை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் சுமார் 35,000 கோடி ரூபாய் முதலீடு 8 ஆண்டுகள் கால அளவில் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்கையின் நோக்கம்

  • நகர எரிவாயு விநியோகத்திற்கான உட்கட்டமைப்பை விரைவாகச் செயல்படுத்துவதை உறுதி செய்தல், விரைவான அனுமதிகளை வழங்குதல், 
  • இயற்கை எரிவாயு பயன்பாட்டைப் படிப்படியாக ஊக்குவிக்க தேவையான விதிகள்/ ஒழுங்குமுறைகளை உருவாக்குதல், பாதுகாப்பான மற்றும் தடையில்லா இயற்கை எரிவாயுவினை விநியோகிக்க தேவையான உட்கட்டமைப்பை நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் பராமரிக்க வலியுறுத்துதல், 
  • மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் திரவ இயற்கை எரிவாயுவை எரிபொருளாக ஏற்றுக்கொள்ள ஊக்குவித்தல் ஆகியவை இக்கொள்கையின் நோக்கமாகும்.

ENGLISH

  • Tamil Nadu City Gas Distribution Policy 2023: Tamil Nadu is one of the leading states in India in terms of economic and industrial development. The government is taking various measures to attract multi-purpose projects, create employment for lakhs of Tamil Nadu youth and strengthen the state economy, to achieve the goal of 1 trillion USD economic growth of Tamil Nadu by 2030 set by Tamil Nadu Chief Minister Stalin.
  • This policy has been developed to encourage the use of environmentally friendly natural gas and to create the necessary rules and procedures to speed up the infrastructure in Tamil Nadu. 
  • Through this policy, natural gas is provided through pipeline to industries, vehicle use and 2.30 crore households. It is expected that through this, an investment of Rs.35,000 crore will be available in 8 years.
  • This policy is designed to encourage the use of natural gas, a green fuel that is environmentally friendly, and to create the necessary rules and procedures to quickly set up the infrastructure in Tamil Nadu.
  • The policy has provided provision of pipeline natural gas to industries, vehicle use and 2.30 crore households in Tamil Nadu. Moreover, it is expected to attract an investment of around 35,000 crore rupees over a period of 8 years.

OBJECTIVE OF THE POLICY

  • Ensuring speedy implementation of infrastructure for city gas distribution, issuance of speedy permits, formulation of necessary rules/regulations to encourage gradual use of natural gas, 
  • urging city gas distribution companies to maintain infrastructure necessary for safe and uninterrupted distribution of natural gas, encouraging adoption of liquefied natural gas as fuel for fishing vessels and telecommunication industry are the objectives of this policy.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel