Type Here to Get Search Results !

18th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


18th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மாற்று பசுமை எரிபொருளுக்கான எத்தனால் கொள்கை 2023 - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
  • தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023', 'தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023', `தமிழ்நாடு சரக்குப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023' மற்றும் 'தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்' ஆகியவை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழில் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், கூடுதல் செயலர் ம.பல்லவி பல்தேவ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், வழிகாட்டி நிறுவன செயல் இயக்குநர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியா, வங்கதேசம் இடையே முதல் டீசல் பைப்லைன் மோடி-ஹசீனா திறப்பு
  • இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு டீசல் கொண்டு செல்ல ரூ.377 கோடியில் பைப்லைன் அமைக்கும் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையேயான முதல் எல்லை தாண்டிய எரிபொருள் பைப்லைன் திட்டமாகும். 
  • இதில், வங்கதேச பகுதியில் பைப் லைன் அமைப்பதற்கான ரூ.285 கோடி செலவையும் இந்திய அரசே ஏற்றுக் கொண்டது. இந்த பைப்லைனை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தனர்.
  • தற்போது இந்த பைப்லைன் அசாமில் உள்ள நுமாலிகரில் இருந்து வங்கதேசத்திற்கு 131.5 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் டன் வரையிலும் டீசல் விநியோகிக்கப்பட உள்ளது.
உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி புது தில்லியில் பி யு எஸ் ஏ IARI வளாகத்தில் உள்ள NASC வின் சுப்ரமணியம் அரங்கில் உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 
  • இந்த இரண்டு நாள் உலகளாவிய மாநாட்டில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் பிற பங்குதாரர்களிடையே சிறுதானியங்கள் பற்றிய விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) தொடர்பான அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்த அமர்வுகள் நடைபெறும். 
  • சிறுதானியங்களின் மதிப்பு சங்கிலி வளர்ச்சி தினைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அம்சங்கள் சந்தை இணைப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
  • கண்காட்சி மற்றும் வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்பு அரங்கையும் பிரதமர் திறந்து வைத்து பார்வையிட்டார். நினைவுத் தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டார். 
  • இதைத் தொடர்ந்து, டிஜிட்டல் முறையிலான இந்திய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) ஸ்டார்ட்அப்களின் தொகுப்பு மற்றும் சிறுதானியங்களின் (ஸ்ரீ அன்னா) தரங்கள் புத்தகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
ஆசிய கோப்பை வில்வித்தையில் இந்தியா 'வெண்கலம்'
  • ஆசிய கோப்பை வில்வித்தை 'லீக்-1' தொடர் சீன தைபேவில் நடக்கிறது. அரையிறுதியில் இந்திய ஜோடி, 153-154 என கஜகஸ்தானிடம் வீழ்ந்தது. 
  • வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஜோடி, பிலிப்பைன்சின் ராச்செல்லி, பால் மார்ட்டன் ஜோடியை சந்தித்தது.
  • முதல் செட்டில் 38-37 என முந்தியது இந்திய ஜோடி. இரண்டாவது செட் முடிவில் 76-75, அடுத்து 115-114 என முன்னிலை பெற்றது. கடைசியில் நான்கு செட் முடிவில் இந்திய ஜோடி 153-151 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel