Type Here to Get Search Results !

2022ம் ஆண்டிற்கான உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியல் / WORLD POLLUTION RANKING LIST OF 2022

  • 2022ம் ஆண்டிற்கான உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியல் / WORLD POLLUTION RANKING LIST OF 2022: உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் சுவிஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் 'ஐக்யூ ஏர்' வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை சுவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளவில் மிகவும் மாசுபட்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. 
  • உலகம் முழுவதும் 131 நாடுகளில் (7,300 நகரங்கள்) இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், முதல் 100 மாசுபட்ட நகரங்களில் 65 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. 
  • இந்தியாவின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில், முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலம் பிவாடி உள்ளது. இந்த நகரம் ஒட்டுமொத்தமாக மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் (பங்களாதேஷ், இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்) மாசுபட்ட நகரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததை காட்டிலும் சுமார் 18.5 மடங்கு மாசுத் துகள்கள் உள்ளன. 
  • அதற்கு அடுத்த இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. 
  • தொடர்ந்து பீகார் மாநிலம் தர்பங்கா, அசோபூர், பாட்னா, சாப்ரா ஆகிய நகரங்களும், உத்தரபிரதேசத்தில் காசியாபாத், முசாபர்நகர், கிரேட்டர் நொய்டா நகரமும், அரியானாவில் தருஹோரா நகரமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 
  • மத்திய மற்றும் தெற்காசியாவில் மிகவும் மாசுபட்ட 15 நகரங்களில் 12 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ENGLISH

  • Every year, the Swiss company 'IQ Air' publishes the list of pollution rankings of the world's countries. In that way, the Swiss company has published the list of pollution ranking of the world's countries for the year 2022. Accordingly, India is among the top 10 most polluted countries in the world.
  • Based on data from 131 countries (7,300 cities) across the world, India has 65 of the top 100 most polluted cities.
  • Rajasthan's Bhiwadi tops the list of the 10 most polluted cities in India. The city is overall the second most polluted city in the Central and South Asian region (Bangladesh, India, Iran, Kazakhstan, Kyrgyzstan, Maldives, Nepal, Pakistan, Sri Lanka, Tajikistan, Turkmenistan, Uzbekistan). It contains about 18.5 times more particulate matter than recommended by the World Health Organization.
  • Next to it is the capital Delhi. Delhi is the third most polluted city in the Central and South Asian region.
  • It is followed by Darbhanga, Azopur, Patna and Chhabra in Bihar, Ghaziabad, Muzaffarnagar and Greater Noida in Uttar Pradesh and Taruhora in Haryana.
  • According to the study, 12 of the 15 most polluted cities in Central and South Asia are in India.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel