24th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதி கட்டமைப்பு மாநாடு தொடக்கம்
- தற்போது ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. இதையொட்டி, கல்வி, நிதி, எரிசக்தி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக, ஜி-20நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கருத்தரங்குகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
- ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதிகட்டமைப்பு பணிக் குழுவின் இரண்டு நாள் மாநாடு சென்னையில் தொடங்கியது.
- இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட உறுப்பு நாடுகள் மற்றும் நட்புநாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
- மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து அரசின் நிதித் துறை தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை வகித்தனர்.
- வெவ்வேறு அமர்வுகளாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், உணவு, எரிசக்தி, பருவநிலை மாற்றம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
- பிரதமர் மோடி நேற்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். அங்கு உலக காசநோய் தினத்தையொட்டி நடந்த ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பங்கேற்றார். இதில் காசநோய் இல்லா பஞ்சாயத்து முன்னெடுப்பு பராமரிப்பு மாதிரி போன்ற முயற்சிகளை தொடங்கி வைத்தார்.
- காசநோய்க்கான தேசிய தடுப்பு சிகிச்சை, இந்தியாவில் காசநோய் 2023 ஆண்டறிக்கை ஆகியவற்றை வெளியிட்டார். காசநோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருதுகள் வழங்கினார்.
- மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ராங்க்ஷ் பாட்டீல் 262.3 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் பெற்றார். சீனாவைச் சேர்ந்த ஷெங் லிஹாவோ, டியு லின்ஷு முறையே தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
- 3-வது நாளின் முடிவில் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. 5 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகிக்கிறது. இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.
- பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
- மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- ஏற்கனவே ஜனவரி 2023யில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அகவிலைப்படி தற்போது 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட 'தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை' ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் குமார் ஜயந்த், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் ராமன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) ஒப்புதல் அளித்துள்ளது. விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- 2023-24 பருவத்தில் சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) (முந்தைய TD-5 தரத்திற்கு சமமான TD-3) ஒரு குவிண்டாலுக்கு ரூ.5050/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய சராசரி எடை அளவிலான உற்பத்தி செலவை விட 63.20 சதவீதம் வருமானத்தை உறுதி செய்யும்.
- 2023-24 பருவத்திற்கான அறிவிக்கப்பட்ட கச்சா சணல் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) 2018-19 நிதிநிலை அறிக்கையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அகில இந்திய சராசரி எடை அளவிலான உற்பத்திச் செலவை குறைந்தபட்சம் 1.5 மடங்கு என்ற அளவில் ஈடுகட்டும் வகையிலான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயிக்கும் கொள்கைக்கு ஒத்துள்ளது.
- இது குறைந்தபட்சம் 50 சதவீதத்தை லாப வரம்பாக உறுதி செய்கிறது. இது சணல் விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை உறுதி செய்வதற்கும் தரமான சணல் இழை தயாரிப்பை ஊக்குவிப்பதற்கும் முக்கியமான மற்றும் முற்போக்கான படிகளில் ஒன்றாகும்.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமரின் உஜ்வாலா பயனாளிகளுக்கு 14.2 கிலோ எரிவாயு உருளைக்கு ரூ. 200 என்று அதிகபட்சம் ஆண்டுக்கு 12 முறை எரிவாயு நிரப்புவதற்கு மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
- 2021 மார்ச் 1 ஆம் தேதி படி 9.59 கோடி பிரதமரின் உஜ்வாலா பயனாளிகள் நாட்டில் உள்ளனர். இந்த மானியத்திற்காக 2022-2023 நிதியாண்டில் 6100 கோடி ரூபாயும், 2023 - 2024 நிதியாண்டில் 7680 கோடி ரூபாயும் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
- இந்த மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இந்த மானியம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.
- 2019- 20 இல் 3.01 ஆக இருந்த சமையல் எரிவாயு உருளைப் பயன்பாடு 2021-22 ல் 20 சதவீதம் அதிகரித்து 3.68 ஆக உள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகள் அனைவரும் இந்த மானியத்தை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
- கிராமப்புற, ஒடுக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருளை வழங்கும் முயற்சியாக, இலவச சமையல் எரிவாயு உருளைகளை ஏழைப் பெண்களுக்கு வழங்கும் நோக்கில், கடந்த 2016 மே மாதத்தில் உஜ்வாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஹிம்சக்தி திட்டம் என்னும் இரண்டு ஒருங்கிணைந்த மின்னணு போர் அமைப்பு தளவாடங்களை, ஐதராபாத் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
- உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் திட்டத்தின் கீழ் இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது.
- ஹிம்சக்தி திட்டம், பிஇஎல் நிறுவனத்தின் துணை விற்பனை நிலையங்களாக செயல்படும், இந்திய மின்னணுவியல், எம்எஸ்எம்இக்கள் உள்ளிட்ட தொழில்களை ஊக்குவிக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் மனித நாட்கள் வேலைவாய்ப்பை இது உருவாக்கும்.
- அரசின் மேக் இன் இந்தியா முன்முயற்சியுடன் நாட்டை தற்சார்பு கொண்டதாக மாற்றும் வகையில் உள்நாட்டுத் திறன்களை உருவாக்குவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும்.