Type Here to Get Search Results !

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை / TAMILNADU STATE DISASTER MANAGEMENT PLAN 2023 & STATE DISASTER MANAGEMENT POLICY

  • தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை / TAMILNADU STATE DISASTER MANAGEMENT PLAN 2023 & STATE DISASTER MANAGEMENT POLICY: தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட 'தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை' ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 
  • தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தில், மாநிலம் சந்தித்து வரும் பேரிடர்கள், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில செயல்பாட்டு குழு, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் பல்துறைகளின் பங்கு, இதர துறைகள் மற்றும் பங்கேற்பாளர்கள் குறித்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. 
  • வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று, நிலச்சரிவுகள், பூகம்பம், ரசாயன தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள், அணுமின் நிலையங்கள், கதிர் வீச்சுகள் போன்ற பல்வகை பேரிடர்களை கையாளுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்தும், மாநிலத்தில் பல்வேறு வகையான பேரழிவுகளால் பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், அரசு துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் மூலம் பேரிடர் தணிப்பு மற்றும் பருவகால மாற்றங்களின் சீற்றத்தணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியதின் அவசியம், அதற்கான சாத்தியக்கூறுகள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கொள்கைகள், திட்டமிடுதல், நிதி ஒதுக்கீடு, துறைகள் வாரியான பேரிடர் தணிப்பு சாத்தியக்கூறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
  • வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோருக்கு பேரிடர் காலங்களில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்தும், பல்வேறு துறைகளின் பொறுப்பு மற்றும் பங்களிப்பு குறித்தும், பேரிடர் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய ஊடக மேலாண்மை குறித்தும், பேரிடர் மீட்பு மற்றும் மறுசீரமைப்பில் முன்னர் இருந்ததை விட தரமான, சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்குதல் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
  • ஒரு வலுவான பேரிடர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் அனைத்து வகை பேரிடர்களின் எதிர்மறையான விளைவுகளை குறைத்து, உயிரிழப்பு, பொது சொத்துகள் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகளின் சேதம் ஆகியவற்றை தவிர்த்தல், அரசு உருவாக்கிய பொருளாதார மற்றும் வளர்ச்சி ஆதாயங்களை இழக்காது இருத்தல் என்பதே மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கையின் நோக்கமாகும். 
  • தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை, பல்வகை பேரிடர்களுக்கான எச்சரிக்கை அமைப்பு, ஆபத்து, பேரிடர் பாதிப்புகளின் மதிப்பீடு மற்றும் அபாயம் குறித்த பகுப்பாய்வு, பேரிடர் அபாயத்தை குறைப்பதற்கான தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைத்து துறைகளால் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களில், பேரிடர் அபாயக் குறைப்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இணைந்து செயல்படுத்துதல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துகிறது.
  • மேலும், பேரிடர்களால் ஏற்படும் இறப்பு, பாதிப்பிற்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை, நலிந்த பிரிவினருக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அடிப்படை சேவைகளின் பாதிப்பு, பொருளாதார இழப்பு ஆகியவற்றை குறைப்பதற்கு இக்கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது. 
  • பேரிடர் அபாய குறைப்பிற்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் இந்த கொள்கை, பேரிடர் அபாயத்தை குறைப்பதற்கான உலகளாவிய மற்றும் தேசிய கட்டமைப்பின் அடிப்படையிலும், மாநிலத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறும் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • பேரிடர் அபாய குறைப்பிற்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் இந்த கொள்கை மாநிலத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறும் உருவாக்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • Chief Minister M. K. Stalin released the 'Tamil Nadu State Disaster Management Plan - 2023 and State Disaster Management Policy' prepared by the Tamil Nadu State Disaster Management Authority at the Chennai Chief Secretariat.
  • In the Tamil Nadu State Disaster Management Plan, an explanation has been given about the disasters faced by the state, Tamil Nadu Disaster Management Authority, State Action Committee, District Disaster Management Authority, role of various departments involved in disaster management, other departments and participants.
  • It has been informed about the precautionary measures and capacity building exercises required to deal with various disasters like floods, tsunami, cyclone, drought, heat wave, landslides, earthquake, accidents in chemical factories, nuclear power plants, radiation and the areas affected by different types of disasters in the state.
  • Also, the need, possibilities, policies to be implemented, planning, allocation of funds, sector-wise disaster mitigation possibilities have been pointed out to carry out disaster mitigation and climate change mitigation through the projects implemented by the government departments.
  • The security priorities to be given to the elderly, disabled, children and third gender during disasters, the responsibility and contribution of various departments, the media management to be followed during disasters, and the creation of quality and better structures than before in disaster recovery and rehabilitation have been explained.
  • The aim of the improved Tamil Nadu State Disaster Management Policy is to reduce the negative effects of all types of disasters through a robust disaster management drive, avoid loss of life, damage to public property and critical infrastructure, and not lose the economic and developmental gains made by the state.
  • The Tamil Nadu State Disaster Management Policy focuses on increasing multi-disaster warning system, hazard, disaster impact assessment and risk analysis, mitigation measures for disaster risk reduction and development programs implemented by all sectors, prioritizing and co-implementing disaster risk reduction activities.
  • Also, the policy emphasizes on reducing disaster-related deaths, number of victims, impact on vulnerable groups and damage to basic services and economic loss.
  • Providing clear guidance for disaster risk reduction, the policy is based on the global and national frameworks for disaster risk reduction and tailored to the state's vision and priorities.
  • The policy provides clear guidelines for disaster risk reduction and is tailored to the state's vision and priorities.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel