17th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட புதிய கேலரி - முதல்வர் திறந்து வைத்தார்
- இந்தியாவில் உள்ள பழமைவாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் உள்ளது. இந்த மைதானம் கடந்த 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டது.
- அப்போது ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகள் புதிதாக அமைக்கப்பட்டன. ஆனால் இந்த 3 கேலரிகளும் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி சீல் வைக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளும், ஒப்பந்த புதுப்பிப்புக்கும் கடந்த 2021-ம் ஆண்டு தீர்வு காணப்பட்டது.
- இதைத் தொடர்ந்து 2022-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் பழைய பெவிலியன் கட்டிடம் இடிக்கப்பட்டது. இந்த இடத்தில் புதுப்பொலிவு மற்றும் நவீன வசதிகளுடன் பெவிலியன் கட்டப்பட்டுள்ளது.
- புதிதாக கட்டப்பட்டுள்ள பெவிலியன் கேலரியின் திறப்பு விழா நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெவிலியனை திறந்து வைத்தார்.
- தொடர்ந்து பெவிலியனில் அமைக்கப்பட்டுஉள்ள கேலரியும் திறக்கப்பட்டது. இந்த கேலரிக்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் தமிழக காவல் துறையில் பெண் காவலர்களின் முதல் காலடித்தடம் பதிந்தது.
- அவர் தொடங்கி வைத்த பெண் காவலர்கள் 50 ஆண்டுகளை தொட்டு இன்று ஆண் காவலர்களுக்கு இணையாக வளர்ந்து சிங்கப்பெண்களாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார்கள்.
- இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் இணைந்து 50 ஆண்டுகள் தொட்டுள்ள பொன்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் டி.ஜி.பி., காவல் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
- பெண் போலீசின் பொன் விழா முழுக்க, முழுக்க பெண் போலீசாரால் நடத்தப்பட்டது. அணிவகுப்பு மரியாதை, சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் பெண் போலீசார் நிகழ்த்திக் காட்டினர்.
- இந்த நிகழ்ச்சியில் அவள் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவையொட்டி சிறப்பு தபால் தலையையும் முதல்வர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னான 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.
- பெண் காவலர்களுக்கு புதிய அறிவிப்புகள் - ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம், பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி, காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை, காவலர்களின் குழந்தை காப்பகங்கள் மேம்படுத்தப்படும், கலைஞர் காவல் கோப்பை விருது , குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல், பெண்களுக்கு தனி துப்பாக்கி சுடும் போட்டிகள், ஆண்டுதோறும் பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு, பணி ஆலோசனை குழு அமைக்கப்படும்
- சாகித்ய அகாடமியின் 2019 ஆம் ஆண்டுக்கான 'பாஷா சம்மான் விருது' முனைவர் அ.தட்சிணாமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இது இந்திய மொழிகளில் செவ்விலக்கியம் இடைக்கால இலக்கியம் (Classical and Medieval literature) தொடர்பான சிறந்த சேவைக்கு ஒவ்வோராண்டும் வழங்கப்படும் விருதாகும். மார்ச் 13ஆம் தேதி மாலை டெல்லி ரவீந்திர பவனில் வால்மீகி சபாகர் அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- நாடு முழுவதும் மின்னணு வர்த்தக விநியோக சேவையை கடைக்கோடிக்கும் வழங்கும் முறையை ஊக்குவிக்க இந்திய அஞ்சல் துறை, ஷிப்ராக்கெட் என்ற நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
- அஞ்சலக சேவைகள், தலைமை இயக்குனர் திரு அலோக் சர்மா மற்றும் ஷிப்ராக்கெட், பிக்கர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதன் அடிப்படையில் சுமார் 3 லட்சத்திற்கும் மேலாக வலிமையான விற்பனை தளத்தைக் கொண்டிருக்கும் ஷிப்ராக்கெட் நிறுவனத்தினால் கடைக்கோடிக்கும் சென்றடையும் வகையில் விநியோக சேவைகள் அளிக்க முடியும். இதன் விளைவாக நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை ஐபிஓ மூலம் பங்கு சந்தைகளில் பட்டியலிட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- புதிய பங்கு வெளியீட்டின் மூலம் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் நிதியை உயர்த்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத்துறை பங்குச்சந்தையில் பட்டியலிடும் பணிகளை மேற்கொள்ளும்.
- 2017-ம் ஆண்டு இது தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசு 1500 கோடி ரூபாய் முதலீட்டை செலுத்தி முதலீட்டு கட்டமைப்பில் மாற்றங்களை செய்த நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும் அரசின் தொழில்நுட்ப கூட்டு நிறுவனமாக இயங்கும் தேசிய தகவலியல் மையமும் அதன் ஆடிட்ஆன்லைன் எனும் செயலியும் திட்டத்திற்கான உயரிய விருதை வென்றுள்ளன.
- அனைத்து பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளிலும் இணைய வழியாக தணிக்கை பணிகளை மேற்கொள்ளும் ‘வசதி பிரிவில்’ ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் உலக உச்சிமாநாட்டில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- வடகிழக்கு ரயில்வேயின் முக்கிய முக்கிய சாதனையாக துதானி -மேன்டிபதர் ஒற்றை ரயில்பாதை மற்றும் அபயபுரி- பஞ்சரத்னா இரண்டைப் ரயில்பாதையும், 2023, மார்ச் 15ல் முழுமையாக மின் மயமாக்கப்பட்டுள்ளன. மத்திய ரயில்வே மின்மயமாக்கல் அமைப்பு இந்த வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணியை மேற்கொண்டது.
- மேகாலயாவில் ஒரே ரயில் நிலையமான மேன்டிபதர் 2014ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடம் மின்மயமாக்கப்பட்டபின், ரயில்களின் வேகம் அதிகரிக்கும் என்பதுடன், பயணிகள் மற்றும் சரக்குப்போக்குவரத்தும் அதிகரிக்கும். குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுவதற்கான சூழலும் அதிகமாகும்.
- வடகிழக்குப் பகுதிகளில் ரயில்களை மின்மயமாக்குவது, அந்த மாநிலங்களில் போக்குவரத்தை மேம்படுத்தும். அத்துடன், புதைபடிம எரிபொருளில் இருந்து மின்சாரத்திற்கு மாறுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடும் தவிர்க்கப்படும்.