14th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னை வெள்ள அபாய குறைப்புக்கான ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருப்புகழ் வழங்கினார்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக வெ. திருப்புகழ் நியமிக்கப்பட்டார்.
- சென்னையில் மழைநீர் தேங்காத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
- இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கையை ஆலோசனைக்குழு தலைவர் திருப்புகழ் சமர்ப்பித்ததுடன், அறிக்கையின் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
- தற்போது நகர்ப்புற பாதாளச்சாக்கடை, நகர்ப்புற திட்டமிடல், திடக்கழிவு மேலாண்மை, பருவகால மாற்றம், பொதுமக்கள் பங்களிப்பு உள்ளிட்ட 11 வகையான பிரிவுகளின் கீழ் 365 பரிந்துரைகளை வழங்கியுள்ளோம்.
- ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி, ஆய்வு நிறுவனம், ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது.
- கடந்த 2022-ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 40% ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
- இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அந்த நாட்டில் இருந்து 16% ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் 11%, சீனா 5.2%, ஜெர்மனி 4.2%, இத்தாலி 3.8%, இங்கிலாந்து 3.2%, ஸ்பெயின் 2.6%, தென்கொரியா 2.4%, இஸ்ரேல் 2.3% என நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- இதுபோல அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியா மட்டும் 11% ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
- இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரஷ்யா 45 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. பிரான்ஸில் இருந்து 29%, அமெரிக்காவிடம் இருந்து 11% ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.
- பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து சர்வதேச அளவிலான ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
- கடந்த 2013-17 ஆண்டுகளை ஒப்பிடும்போது 2018-22-ம் ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி சுமார் 11% அளவுக்கு குறைந்திருக்கிறது. உள்நாட்டில் ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவதால் அந்த நாட்டின் ஆயுத இறக்குமதி படிப்படியாக குறைந்து வருகிறது.
- கடந்த 2013-17-ம் ஆண்டுகளில் இந்திய ஆயுத இறக்குமதியில் 64 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்தது. கடந்த 2018-22-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் ரஷ்ய ஆயுத இறக்குமதி 45% ஆக குறைந்திருக்கிறது.
- அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் சவுதிஅரேபியா 9.6%, கத்தார் 6.4%, ஆஸ்திரேலியா 4.7%, சீனா 4.6%, எகிப்து 4.5%, தென்கொரியா 3.7%, பாகிஸ்தான் 3.7%, ஜப்பான் 3.5%, அமெரிக்கா 2.7% ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- சர்வதேச அளவில் ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி 5.1 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி 47 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிடம்இருந்து உக்ரைன் பெருமளவில் ஆயுதங்களை வாங்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மஹாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேகா யாதவ். 55 வயதான இவர், ஆசியாவின் முதல் பெண் ரயில் டிரைவர் என்ற பெருமையைப் பெற்றவர். இந்த சாதனைக்காக, மாநிலம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
- இப்படி 34 ஆண்டுகள் ரயில் டிரைவர் பணியில் அனுபவமுள்ள சுரேகா யாதவ், வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளார். இவர், மஹாராஷ்டிராவில் உள்ள சோலாபூரில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் வரை, வந்தே பாரத் ரயிலை இயக்கி உள்ளார். இதன் மூலம் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் டிரைவர் என்ற பெருமையையும் சுரேகா யாதவ் பெற்றுள்ளார்.
- 2023 பிப்ரவரி மாதத்திற்கான அகில இந்திய மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் வருடாந்திர பணவீக்க விகிதம் (தற்காலிக) 3.85% அளவுக்கு பதிவானது. இது 2023 ஜனவரியில் 4.73%ஆக இருந்தது.
- கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள், தாதுக்கள், கணினி, மின்னணு மற்றும் ஒளியியல் சார்ந்த பொருட்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள், மின்சார சாதனங்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் முதலியவற்றின் விலை குறைந்திருப்பதால், 2023 பிப்ரவரியில் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது.
- ஜி20 அமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுள்ள நிலையில், தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தின் பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் சக்தி ஆகியவை இணைந்து என்ஒய்சி 2023 என்ற மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
- இந்த மாநாட்டில் வினாடி-வினா போட்டி, விவாதப் போட்டிகள், ஜனநாயக நடைமுறைகள் பற்றிய இளைஞர்களின் புரிதலுக்கு உதவும் விவாதங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன.
- 10-க்கும் மேற்பட்ட அமர்வுகளில் 50-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 100-க்கும் மேற்பட்ட நகர்ப்புற தலைவர்கள், 300-க்கும் மேற்பட்ட அறிக்கைகள், 500-க்கும் மேற்பட்ட பருவநிலை தலைவர்கள் என கடந்த 2 நாட்களாக 3000க்கும் மேற்பட்டோர் புதுதில்லி விஞ்ஞான் பவனில் நேரிலும், ஆன்-லைன் மூலமாகவும் கலந்து கொண்டனர். ஏராளமான மாணவர்கள், இளம் தொழில் நிபுணர்கள், வல்லுநர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
- இதன் நிறைவு அமர்வில் ஜி20 தலைமைத்துவத்தின் ஷெர்பா, திரு.அமிதாப் கந்த் கலந்து கொண்டு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.