10th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நேர்மையான தேர்தல் நடைமுறை - 3வது சர்வதேச மாநாடு
- உலகின் பிற ஜனநாயக நாடுகளுடன் அதன் அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் நேர்மையான தேர்தல் மாநாடு நடத்தப்பட்டது.
- அங்கோலா, ஆர்மீனியா, ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கோஸ்டரிகா, குரேஷியா, டென்மார்க், டொமினிகா, ஜார்ஜியா, கயானா, கென்யா, கொரியா, மொரீஷியஸ், மால்டோவா, நார்வே, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட 31 நாடுகள்/தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் 59 பிரதிநிதிகள் காணொலி வாயிலாக இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
- இதற்கு முன்னதாக நடப்பாண்டு ஜனவரியில் இந்திய தேர்தல் ஆணையம் 'தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறை' என்ற தலைப்பில் தனது 2வது மாநாட்டை டெல்லியில் நடத்தியது. இதில்,16 நாடுகளைச் சேர்ந்த 40-க்கும்மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
- ஜனநாயகத்திற்கான 2வது உச்சிமாநாடு மார்ச் 29-30 தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்த சர்வதேச மாநாட்டினை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகின் 2வது பெரிய பொருளாதாரத்தையும், வலிமையான ராணுவத்தையும் கொண்ட சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் கடந்த 2012ம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பேற்றார்.
- சீன கட்சியின் நிறுவனர் மா சேதுங்கால் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ஜி சோங்ஷூனின் மகனான ஜின்பிங் ஆரம்பத்தில் பெரிய அளவில் அறியப்படாத தலைவராக இருந்தாலும், 2012ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கினார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரே அதிபராக இருப்பார்.
- சீன அரசியலமைப்பு சட்டப்படி 2 முறைக்கு மேல் எந்த தலைவரும் அதிபராக பதவி வகிக்க முடியாது. இந்த அரசியலமைப்பை கடந்த 2018ல் திருத்தினார் ஜின்பிங்.
- இதன் மூலம் 3வது முறையாக கட்சியின் தலைவராக கடந்த ஆண்டு அக்டோரில் தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, சீன நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் மாநாடு நடந்தது.
- இதில் நாடாளுமன்றத்தின் 2,952 உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராகவும், ராணுவத்தின் தலைவராகவும் ஜின்பிங்கை நியமிக்க ஒப்புதல் அளித்தனர்.
- இதன் மூலம் சீன வரலாற்றில் மா சே துங்குக்குப் பிறகு முதல் முறையாக 3வது முறையாக ஜின்பிங் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அக்னிவீரர்கள் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அவர்கள் 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.
- ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் உச்ச வயது வரம்பில் தளர்வுகளுடன் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.
- முதல் பேட்ச் அக்னிவீரர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்வும், அடுத்த பேட்ச்களில் இருந்து 3 ஆண்டு வயது வரம்பு தளர்வும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த ஈரானும், சவூதி அரேபியாவும் தங்களிடையே தூதரக உறவை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
- சீனாவின் முன்முயற்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இதற்கான ஒப்பந்தத்தால், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
- அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாகவோ, பிற நாடுகளின் மூலம் மறைமுகமாவோ போா் ஏற்படும் அபாயம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- ஈரானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையே மீண்டும் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்களது தூதரங்களை பரபஸ்பரம் அமைக்கவிருக்கின்றன.
- அதிகபட்சம் இரு மாதங்களில் இந்த நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இந்த 3-வது நிகழ்வின் முக்கிய கருப்பொருள் "மாறிவரும் பருவநிலையில் உள்ளூர் விரிவாற்றலைக் கட்டமைத்தல்" ஆகும்.
- இந்த நிகழ்வின் போது, சுபாஷ் சந்திரபோஸ் மேலாண்மை விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 2023- புரஸ்கார் விருது வென்றவர்கள்: ஒடிசா மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மிசோரமின் லுங்கிலி தீயணைப்பு நிலையம் ஆகும்.
- மேலும் பேரிடர் ஆபத்து குறைத்தல் துறையில் புத்தாக்க சிந்தனைகள், முன்முயற்சிகள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
- என்பிடிஆர்ஆர் எனப்படும் பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசியத் தளம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புத் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளவும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும், ஆலோசனைகளைத் தெரிவிக்கவும் செயல்திட்ட அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இது வகை செய்கிறது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி, "பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல்" என்பது குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றினார்.
- 2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு வரிசையில் இது 11-வது கருத்தரங்காகும்.
- 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான ஒரு நல்ல தொடக்கமாக இந்த ஆண்டு பட்ஜெட் காணப்படுவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
- “வருங்கால அமிர்த காலத்தின் பார்வையில் பட்ஜெட் நோக்கப்பட்டு, சோதிக்கப்பட்டது. நாட்டின் குடிமக்களும் அடுத்த 25 ஆண்டுகளை இத்தகைய இலக்குகளுடன் தங்களை இணைத்துக்கொண்டு பார்ப்பது நாட்டிற்கு ஒரு நல்ல அறிகுறியாகும்,” என்று அவர் கூறினார்.
- புதுதில்லியில் வர்த்தகப் பேச்சுவார்த்தை 2023 நிறைவடைந்த பிறகு, இந்திய- அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை செயல்திட்டத்தின் கீழ் குறைகடத்தி விநியோகச் சங்கிலி மற்றும் புத்தாக்க கூட்டுமுயற்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இன்று கையெழுத்திட்டன.
- மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலின் அழைப்பை ஏற்று, அமெரிக்க வர்த்தக அமைச்சர் திருமிகு கீனா ரைமோண்டோ புதுதில்லி வந்துள்ளார்.
- அவரது வருகையை முன்னிட்டு இரு நாடுகளிடையே புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதற்கான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய- அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
- இந்தியாவின் குறைகடத்தி இயக்கம் மற்றும் அமெரிக்காவின் சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தின் அடிப்படையில் குறைகடத்தி விநியோகச் சங்கிலி மீள்தன்மை மற்றும் பன்முகத்தன்மை குறித்து இரு நாடுகளின் அரசுகளிடையே ஒருங்கிணைந்த இயக்கமுறையை உருவாக்குவது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
- பரஸ்பர நன்மை பயக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறமை மற்றும் திறன் மேம்பாட்டில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்தும்.
- மின்சார தேவை அதிகரிக்கும் காலத்தில் அதன் கையிருப்பை உறுதி செய்வதற்கான பிரத்தியேக தளத்தை (PUShP- High Price Day Ahead Market and Surplus Power Portal) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- மாநில அரசுகள் மற்றும் மின்சார துறையைச் சேர்ந்த 200 பங்குதாரர்கள் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற விழாவில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் இந்த தளத்தைத் தொடங்கி வைத்தார்.
- மத்திய எரிசக்தி மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் திரு கிருஷன் பால் குர்ஜர், எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு அலோக் குமார் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.