Type Here to Get Search Results !

11th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


11th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

'சிங்கார சென்னை' 2.0 திட்டத்தில் 42 பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு
  • சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயானபூமிகள், 16 பள்ளிக் கூட்டடங்கள் மற்றும் புரதான சின்னமான விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளித்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
'TARKASH' பயங்கரவாத தடுப்பு: இந்திய - அமெரிக்க படைகள் சென்னையில் கூட்டுப் பயிற்சி
  • போர் உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. மெமிக்கல் மற்றும் பையோ போர் இரண்டும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.  இந்நிலையில், தற்போது இந்தியா-அமெரிக்கா இடையே பயங்கரவாத தடுப்பு கூட்டுப்பயிற்சி நடந்து வருகிறது. 
  • இந்த பயிற்சியில் முதல் முறையாக அணு மற்றும் உயிரி பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக பயிற்சி நடைபெறுகிறது. Chemical, Biological, Radiological and Nuclear (CBRN) போருக்கு எதிராக கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
  • 6-வது முறையாக நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சி இந்தாண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. பிப்ரவரி 14-ம் தேதிவரை நடைபெறுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் பின்னணியில் இந்த கூட்டுப்பயிற்சி நடைபெறுகிறது. 
  • சென்னையில் நடைபெற்று வரும் பயிற்சியில் மெமிக்கல் மற்றும் உயிரி தாக்குல்களை எதிர்ப்பதற்கான பயிற்சியையும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • IAF ஹெலிகாப்டர்கள் மூலம் இலக்கை தாக்குவது போன்ற ஒத்திகையும் செய்யப்பட்டது. வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழிப்பது, பணயக்கைதிகளை மீட்பது மற்றும் இரசாயன முகவர் ஆயுதத்தை செயல் இழக்கச் செய்வது ஆகியவை பயிற்சி செய்யப்பட்டது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - தமிழக வீரர் பதக்கம் வென்று புதிய சாதனை
  • ஜகஸ்தானில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தமிழகத்திலிருந்து 7 பேர் உள்பட நாடு முழுவதும் இருந்து 26 வீரர்கள் இந்தியா சார்பில் கலந்துகொண்டுள்ளனர்.
  • இந்நிலையில், மும்முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்ப்) போட்டியில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் கலந்து கொண்டார். 
  • மும்முறை தாண்டுதல் போட்டியில் பிரவீன் சித்ரவேல் 16.98 மீட்டர் தொலைவுக்குத் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
  • இந்திய வீரர் அமர்ஜீத் சிங் 16.26 மீட்டர் தூரம் தாண்டியதே தேசிய அளவிலான சாதனையாக இருந்த நிலையில், தற்போது பிரவீன் சித்ரவேல் அதனை முறியடித்துள்ளார். 
ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் - தமிழக வீராங்கனைகள் இருவர் பதக்கம் வென்று அசத்தல்
  • 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் வருகிற 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. 
  • இந்தப் போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டுள்ளது.
  • இந்நிலையில், தற்போது மகளிர் போல் வால்ட் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை பவித்ரா வெள்ளிபதக்கமும், ரோசி மீனா பால்ராஜ் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். 
  • முன்னதாக, ஆடவர் குண்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் நடப்பு தேசிய சாதனை படைத்த வீரரான தஜீந்தர்பால் சிங் தூர் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜி-20 தலைமைத்துவத்தின் முன்னணி நிகழ்வான டிஜிட்டல் திறன் குறித்த முதலாவது சர்வதேச மாநாட்டை திரு அல்கேஷ் குமார் சர்மா தொடங்கி வைத்தார்
  • தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஏற்பாடு செய்த ஜி-20 தலைமைத்துவத்தின் முன்னணி நிகழ்வான, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் 2023 மற்றும் டிஜிட்டல் திறன் பற்றிய முதலாவது சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel