10th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜம்மு காஷ்மீரில் 5.9 டன் லித்தியம் கண்டுபிடிப்பு
- ஒட்டுமொத்த உலகமும் மின்சார வாகனத்தை நோக்கி செல்லும் நிலையில் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியத்தின் தேவை என்பது அதிகமாக உள்ளது.
- இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டம் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 டன் லித்தியம் உலோகத்தின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இதன்மூலம் உலகளவில் லித்தியம் இருப்பில் சிலிக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தை பிடிக்க உள்ளது.
- காஷ்மீரில் 5.9 டன் லித்தியம் உலோகம் இருக்கும் நிலையில் கர்நாடகா மாநிலம் மண்டியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1,600 டன்கள் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- நாக்பூர் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.
- இந்த வகையில் உலக அரங்கில் இலங்கையின் திலகரத்னே தில்ஷான், தென் ஆப்பிரிக்காவின் டு பிளெஸ்ஸிஸ், பாகிஸ்தானின் பாபர் அஸம் ஆகியோர் ஏற்கெனவே டி 20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருந்தனர்.
- நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
- இதில், பிஎஸ்எல்வி மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
- சிறிய செயற்கைக் கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வதற்காக எஸ்எஸ்எல்வி (Small Satellite Launch Vehicle-SSLV) எனும் ராக்கெட்டை இஸ்ரோ புதிதாக வடிவமைத்தது. 120 டன் எடை கொண்ட இதன் உயரம் 35 மீட்டர். மற்ற ராக்கெட்களைவிட குறைந்த அவகாசம், செலவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
- இதையடுத்து, புதிதாக தயாரிக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட்மூலம், இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.
- ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்-டவுன் அதிகாலை 2.48 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 15 நிமிடங்களில், புவியில் இருந்து 450 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் 3 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
- இத்திட்டத்தின் முதன்மை செயற்கைக் கோளான இஓஎஸ்-7 மொத்தம் 156 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டு. இது புவி கண்காணிப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வு பணிகளுக்கு பயன்படும். விண்வெளியில் ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு, அலைக்கற்றையில் ஈரப்பதம் குறித்த ஆய்வுகளையும் இது மேற்கொள்ளும்.
- கல்விசார் செயற்கைக் கோள்: இதனுடன், அமெரிக்காவின் ஜானஸ் (10.2 கிலோ), சென்னையை சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா அமைப்பின் ஆசாதிசாட்-2 (8.8 கிலோ) ஆகிய 2 செயற்கைக் கோள்களும் ஏவப்பட்டன.
- இதில் ஆசாதிசாட்-2 எனும் கல்விசார் செயற்கைக் கோள், நாடு முழுவதிலும் 750 மாணவிகளின் கூட்டிணைப்பில் உருவாக்கப்பட்டது. இது ரேடியோ அலைக்கற்றை குறித்த ஆய்வை அடுத்த ஓராண்டுக்கு மேற்கொள்ளும்.
- என்சிசி 75-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில், என்சிசி பாடலை இசைக்கும்படியும் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வருகிறார். போட்டியில் அல் நாசர் மற்றும் அல் வெஹ்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ரொனால்டோ நான்கு கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
- இந்தப் போட்டியில் 21-வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த முதல் கோலே அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதன் மூலம் கிளப் ஆட்டத்தில் 500 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
- கிளப் போட்டிகளில் ரொனால்டோ இதுவரை ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும் அடித்துள்ளார். ஜூவென்ட்ஸ் அணிக்காக 81 கோல்களும் அல்நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார்.
- லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.
- இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய வர்த்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்து, முதலீட்டாளர் உத்தரப்பிரதேசம் 2.0 திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
- உத்தரபிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு என்பது உத்தரப்பிரதேச மாநில அரசின் முன்னோடி முதலீட்டு மாநாடாகும்.
- தொழில்துறையினர், கல்வியாளர்கள், உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வருகை தருவதன் மூலம் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைக்கான வழிமுறைகள் கண்டறியப்படும். நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.
- இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாநில அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உலக நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வித்துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் உத்தரப்பிரதேச அரசின் முயற்சியாகவே, பிப்ரவரி 10-12 ஆம் தேதி வரையிலான உத்தரப்பிரதேச சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2023 நடத்தப்படுகிறது.
- உலக நாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதுடன், நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பலப்படுத்துவதற்கும் இந்த மாநாடு வழிவகை செய்யும்.
- அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பின்டல், குஜராத் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், 3-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை குல்மார்கில் தொடங்கி வைத்தார்.
- ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, முக்கிய பிரதிநிதிகள், இளம் வீரர்கள், பயிற்சியாளர்கள், விழாவில் கலந்து கொண்டனர்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் காணொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டது. மேலும், வெள்ளைப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.
- தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 40 கேலோ இந்தியா மையங்கள், காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது.