Type Here to Get Search Results !

TNPSC 28th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


முகலாய தோட்டத்தின் பெயர் 'அம்ருத் உதான்' என மாற்றம்
 • ஜனாதிபதி மாளிகை யில், முகலாய மற்றும் பெர்சிய தோட்டங்களின் பாணியில் மூன்று தோட்டங்கள் உள்ளன.
 • ஸ்ரீநகரில் உள்ள முகலாய தோட்டங்களால் கவரப்பட்ட பொதுமக்கள், இந்த தோட்டங்களில் ஒன்றை முகலாய தோட்டம் என அழைத்து வருகின்றனர். ஆனால், அது அதிகாரப்பூர்வ பெயர் கிடையாது. 
 • தற்போது, நாட்டின் ௭௫வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், முகலாயத் தோட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, அமிர்த தோட்டம் என்ற அர்த்தத்தில், அம்ருத் உதான் என்ற பொதுவான பெயரை ஜனாதிபதி சூட்டியுள்ளார். ஜனாதிபதி மாளிகையின் ஆன்மாவாகக் கருதப்படும் அம்ருத் உதான், ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
இந்திய விமானப் படையின் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதல்
 • மத்திய பிரதேசத்தின் குவாலியரில் இந்திய விமானப் படை தளம் உள்ளது. அங்கிருந்து மிராஜ்-2000 ரக போர் விமானமும், சுகோய்-30 ரக போர் விமானமும் காலை வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டன. மிராஜ் விமானத்தில் ஒரு விமானியும், சுகோய் விமானத்தில் 2 விமானிகளும் இருந்தனர்.
 • குவாலியர் அருகே முரைனா பகுதியில் 2 போர் விமானங்களும் ஒரே திசையில் அருகருகே பறந்தபோது எதிர்பாராதவிதமாக உரசி மோதின. இதில் மிராஜ் விமானத்தில் தீப்பிடித்தது. சுகோய் விமானத்தில் ஓர் இறக்கை சேதமடைந்தது.
 • தீப்பிடித்த மிராஜ் விமானம் முரைனா மாவட்டம், பாகர்கார் கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தை இயக்கிய விமானி ஹனுமந்த் ராவ் சாரதி உடல் கருகி உயிரிழந்தார். அப்பகுதியில் சுமார் 3 இடங்களில் போர் விமானத்தின் உடைந்த பாகங்கள் சிதறி விழுந்தன.
 • மோதலில் இறக்கை சேதமடைந்த சுகோய் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் குதித்தனர். இருவரும் பாகர்கார் வனப்பகுதியில் உள்ள மரங்களின் மீது விழுந்து படுகாயம் அடைந்தனர். சுற்றுவட்டார கிராமத்தினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.2.40 லட்சம் கோடி காலி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்திற்கு பின்தங்கிய அதானி
 • அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த 2 ஆண்டாக நடத்திய ஆய்வில், இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்குச்சந்தையில் வரலாறு காணாத மோசடிகளை செய்துள்ளதாகவும், அதன் மூலம் ரூ.17.80 லட்சம் கோடி முறைகேடாக சம்பாதித்துள்ளதாகவும் பல்வேறு ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. 
 • கடந்த 24ம் தேதி வெளியான இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அவரது சொத்து மதிப்பு கடுமையாக சரிந்தது. 
 • இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்திலிருந்து 4ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி தற்போது 7ம் இடத்திற்கு பின்தங்கி உள்ளார். 
 • ப்ளூம்பர்க்கின் உலக பணக்காரர்கள் குறியீட்டின் நேற்றைய அப்டேட்டில், அதானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.60 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. 
 • இதற்கு முன் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஓரிரு நாளில் ரூ.2.40 லட்சம் கோடி வரையிலும் அதானி நஷ்மடைந்துள்ளார். 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் அரினா சபலெங்கா
 • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அதில் தரவரிசையில் 25ஆவது இடத்தில் இருக்கும் எலினா ரைபகினா, தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருக்கும் அரினா சபலென்கா ஆகியோர் மோதினர் .
 • விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 4 - 6, 6 - 3, 6 - 4 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை வீழ்த்தி அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இது அரினா சபலென்கா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்.சி.சி பொதுக்கூட்டம்: ரூ.75 நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி
 • நாட்டின் தலை நகர் டெல்லியில், கரியப்பா பரேட் மைதானத்தில் என்.சிசி. பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி என்.சி.சி அணிவகுப்பைப் பார்வையிட்டார். 
 • அதன்பின்னர், 75 வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் ரூ.75 நாணயத்தையும் வெளியிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel