Type Here to Get Search Results !

TNPSC 25th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


மகளிர் ஐபிஎல் ஏலம் மூலமாக ரூ.4,670 கோடி - பிசிசிஐ
  • மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் அணிகளுக்கான ஏலம் மும்பையில் நடைபெற்றது.
  • டபிள்யூ ஐபிஎல் போட்டியில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. 
  • அதன் தொடர்ச்சியாகவே மகளிர் ஐபிஎல் ஏலம் நடத்தப்பட்டது. இதில் அகமதாபாத் அணியை ரூ. 1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியுள்ளது.
  • மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பெங்களூரு அணியை ரூ.901 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனமும், டெல்லிஅணியை ரூ.810 கோடிக்கு ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனமும் வாங்கியுள்ளன. கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் குழும் ரூ.757 கோடிக்கு லக்னோ அணியை வாங்கியுள்ளது.
  • 2008-ல் ஆடவர் ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டபோது கிடைத்த ஏலத்தொகையை விடவும் தற்போது அதிகத்தொகை டபிள்யூஐபிஎல் போட்டிக்குக்கிடைத்துள்ளது என்றும் அணிகளின்ஏலம் மூலமாக ரூ.4669.99 கோடி கிடைத்துள்ளது 
ஆக.15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • டெல்லி உயர் நீதிமன்றத்தின் கணினிமயமாக்கப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வகை செய்யும், இணையவழி ஆய்வு மென்பொருள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 
  • இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: ஆங்கிலத்தில் வெளியாகும் தீர்ப்புகளை 99.9% மக்களால் எளிதாக புரிந்துகொள்ள முடிவதில்லை. உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ, பொதுமக்கள் பேசக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய மொழிகளில் தீர்ப்புகளை வழங்கவில்லை என்றால், நீதித் துறையின் சேவை அர்த்தமற்றதாக ஆகிவிடும்.
  • எனவே, ஆங்கிலத்தில் வெளியாகும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை, வரும் ஆக.15-ம் தேதி முதல் தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • தீர்ப்புகளை மொழிபெயர்ப்பது தொடர்பான பணிகளை கவனிக்க நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, அனைத்து உயர் நீதிமன்றங்களும் ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். 
ஐசிசி டி20 கிரிக்கெட்டர் 2022 விருதை வென்றார் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்
  • ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன.
  • இதில் ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதுக்கான பரிந்துரையில் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இங்கிலாந்தின் சாம் கரன் மற்றும் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதில் மற்ற மூவரையும் பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் விருதை வென்றுள்ளார்.
  • சூர்யகுமார் யாதவ் கடந்த 2022-ல் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் மட்டுமே மொத்தம் 1,164 ரன்களை அவர் குவித்தார். மொத்தம் 31 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 9 அரைசதம் பதிவு செய்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 46.56. ஸ்ட்ரைக் ரேட் 187.44. மொத்தம் 17 கேட்ச்களை பிடித்துள்ளார். 68 சிக்ஸர்களை விளாசி உள்ளார். 
  • ஐசிசி வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ரேணுகா சிங் வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 18 விக்கெட்டுகள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 22 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றி இருந்தார்.
இந்தியா - எகிப்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • குடியரசு தின சிறப்பு விருந்தினராக புதுடெல்லி வந்துள்ள எகிப்து அதிபர் அல் சிசி, பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • அப்போது, இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான 75 ஆண்டுகால நட்புறவு குறித்தும், அதனை மேலும் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 
  • அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், அறிவியல், கலாச்சாரம், மக்கள் தொடர்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் ஆகியவை குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
  • இதையடுத்து, 75 ஆண்டு கால நட்புறவை நினைவுகூரும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடியும் எகிப்து அதிபர் அல் சிசியும் இணைந்து வெளியிட்டனர். 
  • மேலும், இரு தலைவர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே இணைய பாதுகாப்பு, கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், ஒளிபரப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதற்கான ஆவணங்கள் இருதரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின்கீழ் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி
  • நாட்டில் அதிகரித்து வரும் கோதுமை விலையேற்றத்தை கருத்தில் கொண்டு 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின்கீழ் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
  • இந்திய உணவுக்கழகம் இந்த 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை மத்திய சேமிப்புக் கிடங்கில் இருந்து பெற்று, உள்நாட்டு திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் விற்பனை செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  • இதன்படி, மாவு ஆலைகள், கோதுமை மொத்த வியாபாரிகள் ஆகியோருக்கு இ-ஏலம் மூலம் அதிகபட்சமாக 3 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமைகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel