Type Here to Get Search Results !

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் சிறப்பம்சங்கள் என்ன? / FEATURES OF TAMILNADU PARADE VEHICLE


தமிழ்நாட்டு ஊர்தியில் என்ன சிறப்பு?
  • தமிழ்நாட்டின் சார்பில் இந்த ஆண்டு பங்கேற்கும் அலங்கார ஊர்தி, சங்க காலம் தொட்டு சமூக வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்கள் வழங்கிய பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • ஆத்திச்சூடி, கொன்றை வேந்தனை இயற்றிய ஒளவையார், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக தீரத்துடன் போரிட்ட வீர மங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. 
  • மையப்பகுதியில் கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி, அந்தக்காலத்திலேயே மருத்துவர்களாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார், 105 வயதிலும் வேளாண் துறையில் சாதித்து வரும் பாப்பம்மாள் ஆகியோரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 
  • ஊர்தியின் பின்பகுதியில் சோழப்பேரரசர் கட்டிய தஞ்சாவூர் பிகதீஸ்வரர் கோவிலின் மாதிரி வடிவம் நிறுவப்பட்டுள்ளது. அலங்கார ஊர்தியுடன் கொம்பு மேளம், நாதஸ்வரம், தவில் வாசித்தபடி இசைக்கலைஞர்கள் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  • கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காத வகையில், தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. 
  • ஆனால், பாதுகாப்புத்துறை தேர்வுக்குழுவின் பரிந்துரைகளின்படி அலங்கார ஊர்தியின் அம்சங்கள் இல்லாததால் அந்த வாகனம் இறுதித் தேர்வில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. 
  • ஆனால், தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை அங்கீகரிக்காமல் தேர்வுக்குழு அலைக்கழித்ததாக சர்ச்சை எழுந்தது.
  • இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாசாரம், சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி இடம்பெற்றுள்ளது. 
What is special about Tamil Nadu vehicles?
  • On behalf of Tamil Nadu, this year's decorative vehicle is designed to reflect the contribution made by women who helped in social development, development and social change during the Sangha period.
  • The portraits of Olavaiyar, who composed Athichudi, Kannai Vendan, and Veera Mangai Velunachiyar, who fought valiantly against the East India Company, are featured on the obverse side of the ornate vehicle.
  • In the center is Carnatic music singer M.S. Subbulakshmi, Bharatanatyam artiste Balasaraswathi, Dr. Muthulakshmi Reddy who were doctors of that time, Ramamirtha Ammaiyar of Moovalur and Papammal who is still achieving in the field of agriculture at the age of 105 have been designed.
  • A model of Thanjavur Bhikadeeswarar temple built by Cholaperasar is installed at the rear of the chariot. Musicians are arranged to go along with the decorated chariots playing kombu melam, nathaswaram and davil.
  • Last year, there was a controversy that Tamil Nadu's decorative vehicle was rejected so that Tamil Nadu did not get representation in the Republic Day function. However, it was explained that the vehicle did not appear in the final examination as it did not have the decorative features as per the recommendations of the Defense Selection Committee.
  • However, controversy arose that the selection committee had not recognized the freedom fighters of Tamil Nadu.
  • In this context, this year the traditional culture of Tamil Nadu features a decorative vehicle designed to express the contribution of women in social change.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel