TAMIL
- டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவரும், தமிழ்நாட்டில் ஆளுநரும் கொடியேற்றி குடியரசு தின விழாவை சிறப்பிக்க இருக்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தருணத்தில் தேசியக்கொடி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம்.
- இந்தியாவின் தேசியக்கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா. பிரிட்டீஷ் ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்தவர்.
- பிங்காலி வெங்கையா பிறந்தது ஆந்திர மாநிலம், மலிச்சிப்பட்டனத்தில். 1876 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிறந்த அவர், புவியியலாளராக பணியாற்றினார். ஜப்பானிய மொழியை சரமாள பேசக்கூடியவர்.
- ஆந்திர தேசியக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றிய அவர், பிரிட்டீஷ் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக போரில் ஈடுபடுவதற்கு தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார்.
- அங்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் இந்திய சுதந்திர போராட்டம் இன்னும் வீரியம் பெற கொடி ஒன்று அவசியம் என்பதை உணர்ந்து பல்வேறு கொடி மாதிரிகளை உருவாக்கினார்.
- இரண்டு கோடுகள் கொண்ட சிவப்பு மற்றும் பச்சை வர்ணத்தில் கொடி மாதிரி ஒன்றை உருவாக்கிய அவர், நடுவில் காதர் ராட்டை சக்கரத்தை வைத்தார்.
- இதனை மகாத்மா காந்தியிடம் 1921 ஆம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கொடுக்க, அவர் சில ஆலோசனைகளை கொடுத்து அந்த மாதிரிக்கு ஒப்புதல் அளித்தார்.
- காந்தியின் ஆலோசனையின் பேரில் வெள்ளை சேர்க்கப்பட்டு மூவர்ணமாக தேசிய கொடி மாறியது.
- இந்தியாவுக்கு தேசிய கொடி வடிவமைத்து கொடுத்து பெரும் புகழுக்கு சொந்தக்காரராக மாறிய பிங்காலி வெங்கையா 1963 ஆம் ஆண்டு காலமானார்.
- அவரது நினைவாக 2009 ஆம் ஆண்டு தபால் தலை வெளியிட்ட மத்திய அரசு, விஜயவாடாவில் இருக்கும் அகில இந்திய வானொலி நிலையத்திற்கு அவரது பெயரையும் சூட்டியுள்ளது.
- The President of the Republic at the Red Fort in Delhi and the Governor of Tamil Nadu will hoist the flag to celebrate the Republic Day. On such a special occasion it is important to know some interesting facts about the National Flag.
- Pingali Venkaiah designed the national flag of India. He served as a soldier in the British Army.
- Pingali Venkaiah was born in Malichivanu, Andhra Pradesh. Born on 2nd August 1876, he worked as a geographer. Fluent in Japanese. He also worked as a lecturer at the Andhra National College and was sent to South Africa to fight as a soldier in the British Indian Army. Based on the experiences he got there, he realized that a flag was necessary for the Indian freedom struggle to be more vigorous and created various flag models.
- He made a flag pattern in red and green with two stripes and placed a qatar rod wheel in the middle. It was presented to Mahatma Gandhi at the 1921 Congress Conference in Vijayawada, where he gave some suggestions and approved the model.
- On Gandhi's advice, the national flag became a tricolor with the addition of white. Pingali Venkaiah, who became famous for designing the national flag of India, died in 1963. The central government issued a postage stamp in his honor in 2009 and named the All India Radio station in Vijayawada after him.