TNPSC 21st JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
TNPSCSHOUTERSJanuary 22, 2023
0
சென்னையில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க, 6.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் ஆமை இனங்களில் ஒன்றான சித்தாமையின் முக்கிய இருப்பிடமாக தமிழக கடற்கரை திகழ்கிறது.
ஆமைகள் பாதுகாப்பு முயற்சிகளை ஊக்கப்படுத்த, சென்னையில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கிண்டி சிறுவர்கள் பூங்காவில், சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க, தமிழக அரசு, 6.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கான அரசாணையை, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுஉள்ளார்.
தமிழ்நாடு - ஒடிசா விளையாட்டுத்துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
15வது ஹாக்கி உலக கோப்பை போட்டிகளை காணவும், அம்மாநில விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிடவும் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் முன்தினம் ஒடிசா மாநில விளையாட்டு துறை அமைச்சக அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தமானது, இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் வழி வகுக்கும். இதனால் உலக தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சர்வதேச விளையாட்டு அகாடமி, விளையாட்டு கல்வி கூடங்கள், சிறப்பு மையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற நவீன வசதிகளை உருவாக்கிடவும், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிடவும், சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்திடவும் இரு மாநிலங்களும் முறையான ஒத்துழைப்பு வழங்கும்.
சென்னை போலீசாருக்கு "ஸ்காச் தங்க விருது"
2022ம் ஆண்டிற்கான ஸ்காச் விருதுக்காக 'ஸ்காச் குரூப்' (SKOCH group) நிறுவனம் அறிவிப்பு செய்திருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் துறையில் இயங்கி வரும் செயல் திட்டம் காவல் கரங்கள் (சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்படும்,
மேலும், இந்த திட்டத்தின் மூலம் உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படும் திட்டம்), சிற்பி (மாணவர்களை நல்வழி படுத்தவும், சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயத்தை உருவாக்கவும், அரசு பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு திட்டம்), ஆனந்தம் (பெண் காவலர்கள் தங்கள் பணியிலும் குடும்பத்திலும் சமநிலை படுத்தி வாழும் பயிற்சி திட்டம்), மகிழ்ச்சி (தற்கொலை எண்ணங்கள் மற்றும் குடிபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்காக உளவியல் மறுவாழ்வு திட்டம்), காவலர் விடுப்பு செயலி (காவலர்கள் எளிதில் அனைத்து வகையான விடுப்புகளை எடுப்பதற்கான செயலி திட்டம்) ஆகியவை முன்மொழியப்பட்டு விருதிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஸ்காச் விருது ஆரம்ப நிலை, அரை இறுதி நிலை, இறுதி நிலை என 3 கட்டமாக நடத்தப்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர்கள் குழுக்கள் அனைத்து செயல் திட்டங்களையும் மதிப்பீடு செய்தார்கள்.
அவர்களுக்காக அனைத்து செயல் திட்டங்களும் சென்னை பெருநகர காவல் சார்பாக விரிவாக விளக்கப்பட்டிருந்தது.
மேலும் பொதுமக்கள் சார்பாக இணையவழி முறையில் ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்களும் ஓட்டளித்தனர். இதில் கடந்த அரை இறுதி சுற்றுக்கு காவல் கரங்கள், சிற்பி மற்றும் மகிழ்ச்சி திட்டங்கள் தகுதி பெற்றது.
ஜன.20 நடைபெற்ற இறுதிசுற்றில் இந்த 3 திட்டங்களுக்கும் ORDER OF MERIT-2022 AWARD கிடைக்கப் பெற்றது. மேலும் இறுதியாக அனைத்து தேர்வு நிலையிலும் "காவல் கரங்கள்" தகுதி பெற்று POLICE & SAFETY -2022-க்கான ஸ்காச் தங்க விருது - 2022 (Skoch Award-2022 - Gold) பெற்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.