Type Here to Get Search Results !

TNPSC 16th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 

உலக சாதனையில் இடம் பெற்ற ஈஷா மையத்தின் ஆதியோகி சிலை

 • சிக்கபல்லாபூர் அருகே உள்ள அவலகுர்கியில் ஈஷா அறக்கட்டளை சார்பில் 112 அடி உயர ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
 • இந்த சிலை, கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ளது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. திறப்பு விழாவைத் தொடர்ந்து 112 அடி உயர ஆதியோகியின் மீது 'ஆதியோகி திவ்ய தரிசனம்' என்ற பெயரில் 14 நிமிட ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி நடந்தது.
 • ஆதியோகியின் திருவுருவத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். இங்கு கடந்த ஆண்டு அக்டோபர் 9ல், சத்குரு ஜக்கி வாசுதேவ் நாக பிரதிஷ்டை செய்திருந்தார்.
 • ஆதியோகிக்கு மஹா மங்களாரதி நடனம், கேரளாவை சேர்ந்த தேயம் பென்கி நடனம், ஜக்கி வாசுதேவ் மகளின் பரதநாட்டியம் என அனைத்தும் பார்வையாளர்களை கவர்ந்தது. உலகின் மிகப்பெரிய மார்பளவு சிற்பமாக கின்னஸ் உலக சாதனையாகவும் இந்த சிலை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
DAVOS 2023 - உலக பொருளாதார மன்றத்தின் சர்வதேச கூட்டம் தொடங்கியது
 • உலக பொருளாதார மன்றத்தின் ஆலோசனை கூட்டத்தில் 130 நாடுகளைச் சேர்ந்த 2,700 பேர் பங்கேற்றுள்ளனர். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் எம் ரமபோசா, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உள்ளிட்ட 52 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
 • இந்தியாவிலிருந்து மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, ஸ்மிருதி இரானி மற்றும் ஆர்.கே.சிங் ஆகியோர் பங்கேற்று இந்தியாவின் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். 
 • இவர்களை தவிர மாநில முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, பிஎஸ் பொம்மை, யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
 • டாடா சன்ஸ், விப்ரோ, டெக் மகிந்திரா, சீரம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் தலைவர்களும் டாவோஸ் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். 
 • கூட்டத்தில் ரஷ்யா உக்ரைன் போர், சர்வதேச அளவிலான பணவீக்கம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
கிரிட்டிக்ஸ் சாய்ஸ்  2 விருதுகளை குவித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம்
 • இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. 
 • உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. இந்தப் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்ற முதல் இந்தியா பாடல் இதுவாகும்.
 • இந்நிலையில், 28-வது கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த பாடல் என இரு முக்கிய விருதுகளை ஆர்ஆர்ஆர் படம் வென்றுள்ளது.
ரூ.20 கோடியில் "வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்" திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்
 • ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு ரூ.20 கோடியில் 'வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 • விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்கிடவும், உறைவிடம் மற்றும் அவசர ஊர்தி சேவைக்காகவும், நீலகிரி - India Project for Animal Fund Nature, சென்னை - Animal Care Trust, சென்னை - Madras Animal Rescue Society, சென்னை - Prithvi Animal Welfare Society மற்றும் சென்னை - பைரவா பவுண்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் 2 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 88 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
2022 டிசம்பர் மாதத்திற்கான அகில இந்திய மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் வருடாந்திர பணவீக்க விகிதம் 
 • 2022 டிசம்பர் மாதத்திற்கான அகில இந்திய மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் வருடாந்திர பணவீக்க விகிதம் (தோராயமாக) 4.95 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது, இது 2022 நவம்பரில் 5.85 சதவீதமாக பதிவாகியிருந்தது.
 • உணவுப் பொருட்கள், தாது எண்ணெய், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உணவு உற்பத்திப் பொருட்கள், ஜவுளி, ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்களின் விலை வீழ்ச்சி 2022 டிசம்பரில் பணவீக்க விகித வீழ்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளது.
 • அனைத்துப் பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண். 2022 அக்டோபரில் 152.9 ஆகவும், பண வீக்க விகிதம் 8.67 சதவீதமாகவும் இருந்தது. இந்த அளவீடு 2022 நவம்பரில் தோராயமாக முறையே 152.1, 5.85 சதவீதமாகவும், 2022 டிசம்பரில் தோராயமாக முறையே 150.5, 4.95 சதவீதமாகவும் இருந்தது.
 • முதன்மைப் பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண். 2022 அக்டோபரில் 181.2 ஆகவும், பண வீக்க விகிதம் 11.17 சதவீதமாகவும் இருந்தது. 
 • இந்த அளவீடு 2022 நவம்பரில் தோராயமாக முறையே 177.7, 5.52 சதவீதமாகவும், 2022 டிசம்பரில் தோராயமாக முறையே 172.4, 2.38 சதவீதமாகவும் இருந்தது.
 • எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் மொத்த விலை குறியீட்டு எண். 2022 அக்டோபரில் 158.0 ஆகவும், பண வீக்க விகிதம் 25.40 சதவீதமாகவும் இருந்தது. 
 • இந்த அளவீடு 2022 நவம்பரில் தோராயமாக முறையே 159.6, 17.35 சதவீதமாகவும், 2022 டிசம்பரில் தோராயமாக முறையே 158.0, 18.09 சதவீதமாகவும் இருந்தது.
 • உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண். 2022 அக்டோபரில் 141.9 ஆகவும், பண வீக்க விகிதம் 4.42 சதவீதமாகவும் இருந்தது. இந்த அளவீடு 2022 நவம்பரில் தோராயமாக முறையே 141.5, 3.59 சதவீதமாகவும், 2022 டிசம்பரில் தோராயமாக முறையே 141.1, 3.37 சதவீதமாகவும் இருந்தது.
 • உணவுப் பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண். 2022 அக்டோபரில் 177.7 ஆகவும், பண வீக்க விகிதம் 6.60 சதவீதமாகவும் இருந்தது. இந்த அளவீடு 2022 நவம்பரில் தோராயமாக முறையே 174.3, 2.17 சதவீதமாகவும், 2022 டிசம்பரில் தோராயமாக முறையே 170.3, 0.65 சதவீதமாகவும் இருந்தது.
 • மொத்த விலை குறியீட்டு எண் மற்றும் வருடாந்தர பணவீக்க விகிதம் சென்ற ஆண்டுடன் ஒப்பிடப்பட்ட சதவீதமாகும்.
விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையே கையெழுத்து
 • விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில்  கடன் வழங்குவது தொடர்பாக தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 • மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீதுக்கு (e.NRS) ஈடான, பிரத்யேக நிதியத்திற்குரிய உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் என்றழைக்கப்படும் புதிய வகை கடன்  தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 
 • இந்தக் கடன் நடைமுறையில், செயல்பாட்டுக் கட்டணங்களோ, கூடுதல் பிணையங்களோ இருக்காது என்பதுடன் இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. 
 • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், விவசாயக் கடன்கள் தொடர்பான உறுதியை அதிகரிப்பதுடன்ஈ விவசாய டெபாசிட்தாரர்களுக்கு இவற்றின் பலன்களை எடுத்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
21வது இந்தியா-பிரான்ஸ் கூட்டு கடற்படைப்பயிற்சி ‘வருணா’- 2023
 • 21-வது இந்தியா-பிரான்ஸ் கூட்டு கடற்படைப்பயிற்சி ‘வருணா’- 2023 மேற்கு கடற்பகுதியில் 16 ஜனவரி 2023 தொடங்கியது. இரு நாட்டு கடற்படையின் கூட்டுப்பயிற்சி 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு ‘வருணா’ என்று 2001ம் ஆண்டு பெயரிடப்பட்டது.
 • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘மறைந்திருந்து ஏவுகணையை அழிக்கும் ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் தேக், கடல் பகுதி ரோந்து விமானம் பி-81, டார்னியர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், மிக்-29கே ரக போர் விமானம் ஆகியவை கூட்டு பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இந்த கூட்டு பயிற்சி 2023-ஜனவரி 16 -ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் கூட்டாண்மைக்காக திரிபுரா அரசுடன் தேசிய அனல்மின் கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் கூட்டாண்மைக்காக திரிபுரா அரசுடன் தேசிய அனல்மின் கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
 • தேசிய அனல் மின் கழகத்தின் புதுப்பிக்கத்தக்க நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் திரு ராஜீவ் குப்தா, திரிபுரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி ஆணையத்தின்  தலைமை செயல் அதிகாரியும், தலைமை இயக்குனருமான திரு மகாநந்தா டெப்பார்மாவும் இதற்கான ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.
 • இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை திரிபுரா மாநிலத்தில் நிறைவேற்ற முடியும். அத்துடன், தூய்மை எரிசக்தி தேவைகளுக்கும், கடமைகளுக்கும் உதவ முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel