- தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வண்ணக் கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொம்பு செடியை கட்டி மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
- இன்று தை பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் நாளை (ஜன. 16) மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வருகிற 17ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
- மீண்டும் 18ம் தேதி பள்ளி கல்லுாரிகள் திறக்கப்பட இருந்தன. அதேப் போல் அரசு தரப்பில் வரும் 17ம் தேதி வரை பள்ளிக் கல்லுாரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
- இதற்கிடையே தமிழர் திருநாளை கருத்தில் வைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என்று அனைவருக்கும் 4 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
- இதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் விதமாக ஜனவரி 18ம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்து உள்ளது என்ற செய்தி வெளியானது.
- பொங்கல் பண்டிகைக்கு வார இறுதியில் விடுமுறை விடப்பட்ட நிலையில், ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என சில வதந்திகள் பரவின.
- இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஜனவரி 18 (புதன்கிழமை) அன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை” என்றார்.
- புதன்கிழமை பள்ளிகள் மூடப்படுவது குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்
ஜனவரி 18ம் தேதி பொது விடுமுறை?? - தமிழக அரசு அறிவிப்பு
January 16, 2023
1
Tags
நன்றி
ReplyDelete