சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் திறன் மேம்பாட்டுக் கழகம் - அரசாணை வெளியீடு
- சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 14-ம் தேதி தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் துறையின் கீழ் கூடுதலாக ஓர் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த அமைப்பு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் இருந்தது.
- புதிய, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்திற்கு ஸ்டார்ட்அப்கள் முக்கியமாகும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
- புதுதில்லியில் “ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தானை” தொடங்கிவைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் புவிசார் சுற்றுச்சூழல் அமைப்பில் புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப்களை ஹேக்கத்தான் ஊக்குவிக்கும் என்றார். தேசத்தின் புவிசார் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் பங்களிக்க இளைஞர்களுக்கு அவர் அழைப்புவிடுத்தார்.
- நமது அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் புஷ்பா கமல் தஹல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், நேபாள நாட்டில் உள்ள நேபாள ராஸ்ட்ரா வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- அதில், நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளி நாட்டில் நிலம், வீடு, கடன்பத்திரங்கள், சொத்துகள் உள்ளிட்டவற்றை வாங்க தடை விதித்துள்ளது.
- அதேபோல், வெளி நாட்டு வங்கிகள், நிதி நிறுவங்களிலும் பணத்தை முதலீடோ, டெபாசிட் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளது.
- தற்போது, நேபாள நாட்டில் வங்கிப் பணப்புழக்கம் நெருக்கடி நிலவுவதால், சொகுசுகார்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கவும் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.