நிதி ஆயோக்கில், பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
- 'உலகளாவிய சிக்கலுக்கிடையே இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மீண்டெழும் திறன்' என்ற தலைப்பில் இந்த ஆலோசனை நடந்தது. அதில், பிரபல பொருளாதார நிபுணர்கள் சங்கர் ஆச்சார்யா, அசோக் குலாதி, ஷாமிகா ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத்தலைவர் சுமன் பெரி மற்றும் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
- முதல்வரின் காலை உணவுத் திட்டம் 2022 செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது.
- 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், முதல்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- இதனால், பள்ளிகளுக்கு வரும் மாணவர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், தமிழக அரசு இந்த திட்டத்தை 2023-2024-ம் ஆண்டில் விரிவாக்கம் செய்து, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க முடிவு செய்துள்ளது.
- இமாச்சலப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சுக்விந்தர் சிங்சுக்கு முதல்வராக பொறுப்பேற்றார்.
- முன்னதாக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மாநிலத்தில் பழைய ஓய்வூதிய முறையே மீண்டும் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது.
- இந்நிலையில் இமாச்சல் அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- தமிழ்நாடு சட்ட பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: 2021 டிசம்பர் 1ம் தேதி முதல் ஆட்சேர்ப்புக்காக, நேரடி ஆட்சேர்ப்பு மூலம் எந்தவொரு பணியிலும் எந்தவொரு பதவிக்கும், விண்ணப்பிக்கும் நபர் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மொழித்தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை அவ்வப்போது அரசால் ஆணையிடப்பட வேண்டும். 2021 டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் காலத்தின்போதும் தமிழ்நாடு அரசிதழில் இந்த சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும் போதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்த சட்டம் நடைமுறையில் இருந்ததைபோல சட்டத்துடன் இணங்கிய வகையில் செல்லும் தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக கொள்ளப்படும்.
- 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (நிபந்தனைகள்) சட்டத்தின் 21ம் பிரிவின்படி, எந்த நபரும் மாநில அலுவல் மொழி அதாவது தமிழ் மொழி குறித்த போதிய அறிவு பெற்றிருந்தாலன்றி அவர் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பணி எதிலும் நியமனம் ெசய்ய தகுதியுடையவரல்ல.
- ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பத்தின்போது தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணி நியமனம் பெற்றால் அவர்கள் பணியமர்த்தப்பட்ட தேதியிலிருந்து 2 ஆண்டுகள் கால அளவிற்குள் தமிழில் இரண்டாம் வகுப்பு மொழி தேர்வில் தேர்ச்சி பெறுதல் வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுதல் வேண்டும்.
- மாநிலத்தில் உள்ள அனைத்து மாநில அரசு துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞர்களை 100 சதவீதம் அளவிற்கு ஆட்சேர்ப்பு செய்வதை உறுதி செய்யும் பொருட்டு ஆட்சேர்ப்பு முகமைகள் நடத்தும் நேரடி ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழித்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கிணங்க 2021 டிசம்பர் 1ம் தேதியிட்ட அரசாணைகள் மனிதவள மேம்பாடு துறையால் வெளியிடப்பட்டன.
- இதற்காக 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
- போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் ஏற்கனவே 31.12.2022 வரை 100 சதவீதம் வரி விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
- இந்நிலையில், பயணிகள், வாகன உற்பத்தியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019-ன் படி பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கை 2023 ஜனவரி 1ம் தேதி முதல் 2026 டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
- தற்போது, தமிழக அரசு கோரிக்கையை ஏற்கும் வண்ணம் பேட்டரியில் இயக்கப்படும் மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் வரி விலக்கை 1.1.2023 முதல் 31.12.2025 வரை நீட்டிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவிற்கு நிதித்துறையின் ஒப்புதல் தேவையில்லை.
- தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரி விதிப்பு சட்டம் 1974 பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
- தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை இன்று தீவுத்திடலில் தொடங்கி வைத்தார்.
- தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து தீவுத் திடலில் சென்னை சங்கம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.
- எனவே இன்று முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், என 16 இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
- இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பசுமை ஹைட்ரஜன் மேம்பாடு மற்றும் கடலுக்கடியில் கேபிள் இணைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூயி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- மூன்றுநாள் பயணமாக அபுதாபி சென்றுள்ள ஆர்.கே.சிங், அந்நாட்டு அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூயியுடன் நடந்த சந்திப்பில், எரிசக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் குறித்து இருநாடுகளுக்கிடையே இருக்கும், பல்வேறு வாய்ப்புகளை பற்றி இருவரும், பேசியுள்ளனர்.
- உலகின் நீளமான நீர்வழித்தட பயணம் மேற்கொள்ளும் எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பலை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (ஜன.13) காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்துனுடன் ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழித்தட திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
- முதல் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி வங்கதேசம் வழியாக 5 மாநிலங்களைக் கடந்து 51 நாட்களில் 3,200 கிமீ பயணம் மேற்கொண்டு அசாமில் இருக்கும் திப்ருகர் துறைமுகத்தை அடைகிறது.