இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- மத்திய இளைஞர் நலன் துறையும் கர்நாடக அரசும் இணைந்து ஜனவரி 12ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 'தேசிய இளைஞர் விழா'வுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
- கர்நாடக மாநிலத்தின் ஹூப்பாளியில் 26-வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ம் தேதி, அவரது கொள்கைகள் மற்றும் போதனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
- இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இளைஞர் திருவிழாவிற்கு, முன்னேற்றம் அடைந்த இளைஞர்களால் வளர்ச்சியடையும் இந்தியா என்பதே கருப்பொருளாக இருந்தது.
- இந்த நிகழ்ச்சியில் கர்நாடகா ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் திரு அனுராக் சிங் தாக்கூர், திரு நிசித் பிரமானிக் மற்றும் கர்நாடக மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று 4-ம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்றது.
- இந்த நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
- தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.
- சேது சமுத்திர திட்டம் தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. சேது சமுத்திர திட்டம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
- தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா-2022-23 போட்டிகள் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட 206 கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன.
- இந்த போட்டிகளில் 13,210 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 28 லட்சத்து 53,882 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில் மாநில அளவிலான இறுதிப் போட்டியில் 1,759 பேர் வெற்றி பெற்றனர்.
- இந்நிலையில், கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கலை திருவிழா போட்டிகளின் விருதுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
- மேலும், போட்டிகளில் தரவரிசை அடிப்படையில் முதலிடம் பெற்ற 4 மாணவர்களுக்கு 'கலையரசன்' விருதும், 4 மாணவிகளுக்கு 'கலையரசி' விருதும் வழங்கி கவுரவித்தார்.
- இதுதவிர, மாணவர்கள் வெற்றி விகிதத்தின்படி கோயம்புத்தூர், சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்தன. அதிக பங்கேற்பாளர்களைக் கொண்டதற்காக வேலூர் மாவட்டத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
- விழாவில் அமைச்சர்கள் அர.சக்ரபாணி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், வி.செந்தில் பாலாஜி, கே.செஞ்சி மஸ்தான், தலைமை செயலர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் ஐ.லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கடந்த டிசம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், ஓராண்டில் இல்லாத அளவுக்கு 5.72 சதவீதமாக சரிந்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை குறைந்தது இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
- கடந்த ஆண்டு நவம்பரில், சில்லரை விலை பணவீக்கம் 5.88 சதவீதமாக இருந்தது. கடந்த 2021 டிசம்பரில் 5.66 சதவீதமாக இருந்தது.கடந்த டிசம்பரில் உணவுப் பொருட்கள் பிரிவில், பணவீக்கம் 4.19 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில், இது 4.67 சதவீதமாக இருந்தது.
- கடந்த ஆண்டு ஜனவரி துவக்கத்தில் இருந்தே, சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கான 6 சதவீதத்தை விட அதிகமாகவே இருந்து வந்தது.
- கடந்த ஆண்டு நவம்பரில் 5.88 சதவீதமாக குறைந்து, டிசம்பரில் 5.72 சதவீதமாக இறங்கி உள்ளது. நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம், கடந்த ஆண்டு அக்டோபரில் சரிவைக் கண்டிருந்த நிலையில், நவம்பரில் 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- நவம்பரில் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது என்றும், சுரங்கத்துறை உற்பத்தி 9.7 சதவீதமாகவும், மின்சார உற்பத்தி வளர்ச்சி 12.7 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- குஜராத் மாநில மின் சக்தி நிறுவன மேலாண் இயக்குனராக பதவி வகித்த பிரசன்னகுமாரை என்.எல்.சி.,யின் புதிய சேர்மனாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் அறிவித்தது.
- தேசிய அனல் மின்சக்தி நிறுவனமும், இந்திய நிலக்கரி நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனமான 'கோல் இந்தியா - என்.டி.பி.சி.,' மின் நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றிய பிரசன்னகுமார், குஜராத் மின் தொடர் அமைப்பு நிறுவனத்தின் துணை மின் நிலையங்கள் அருகே பயனற்ற நிலப் பகுதிகளில் 2,500 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மின் நிலையங்களை அமைத்தவர் என்பது தனிச்சிறப்பாகும்.
- வாஷிங்டனில் 2023, ஜனவரி 10, 11 ஆகிய நாட்களில் நடைபெற்ற இந்தியா – அமெரிக்கா இடையே அமைச்சர்கள் நிலையிலான 13-வது வர்த்தகக் கொள்கைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றிருந்தார்.
- பிரதிநிதிகள் அளவிலான பேச்சுக்களுக்கு முன்பு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், அமெரிக்க வர்த்தக தூதர் திருமதி கேத்தரீன் தாய்-உடன் பேச்சு நடத்தினார்.
- இரு நாடுகளிலும் பணியாற்றும் மக்கள் பயன் பெறும் வகையில் இருதரப்புப் பொருளாதார நட்புறவை மேம்படுத்துவதிலும், இருதரப்பு வர்த்தக நட்புறவை வலுவடையச் செய்வதிலும், வர்த்தக கொள்கைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுவதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டினார்கள். இக்கூட்டத்திற்கு பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
- கடந்த முறை நடைபெற்ற வர்த்தகக் கொள்கைக் கூட்டத்திற்கு பின், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிக்குழுக்களின் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
- வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் திரு ஜினா ரெய்மோண்டோவுடனும் பேச்சு நடத்தினார். அத்துடன், பல்வேறு முன்னணி தொழில் நிறுவனத் தலைவர்களுடன் அவர் விவாதித்தார்.
- நாட்டிலேயே முதன் முறையாக பாசுமதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த விதியின்படி, இயற்கை நறுமணம் கொண்ட பாசுமதி அரிசி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் செயற்கை நிறமூட்டுதல், பாலிஷ் செய்தல், செயற்கையாக மணமூட்டுதல் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை.
- மேலும் பாசுமதி அரிசியின் சராசரி அளவு, அனுமதிக்கப்படும் அதிகப்பட்ச ஈரப்பதம் உள்ளிட்ட இதர குணாதிசயங்களுக்கும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
- பாசுமதி வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவேண்டும் என்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோரின் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்யும் வகையில், பாசுமதி அரிசிக்கு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவின் இமய மலைப்பகுதிகளில் விளையும் முதன்மை ரக பசுமதி அரிசிக்கு அதன் அளவே பிரதானம். அதுமட்டுமல்லாமல், மிருதுவான தன்மை, தனித்துவம் வாய்ந்த நறுமணம், சுவை ஆகியவையே இந்த அரிசி பிரபலமைடைந்ததற்கான காரணிகளாகும். பாசுமதி அரிசியின் தரத்திற்காகவே உலக நாடுகளில் நுகரப்படும் பாசுமதி அரிசியில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியா ஆக்கிரமித்துள்ளது.
- உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் தரமான பாரம்பரிய பாசுமதி அரிசியை விநியோகம் செய்ய ஏதுவாக, பாசுமதி அரிசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய எஃப்எஸ்எஸ்ஏஐ முன்வந்துள்ளது.
- இது குறித்து அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், பங்குதாரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டு தரத்தை நிர்ணயிக்கும் காரணிகள் வகுக்கப்பட உள்ளன.
- இந்திய தபால் மற்றும் இந்திய ரயில்வே இணைந்து கூட்டு பார்சல் விநியோக முறையைத் தொடங்கியது. அதன்படி, 35 கிலோவுக்கு மேற்பட்ட எடையிலான பார்சலை வாடிக்கையாளரின் இருப்பிடத்திலிருந்து பெற்றுக்கொண்டு ரயில் நிலையத்திற்கு அனுப்ப உள்ளது.
- பின்னர், பார்சல் சென்று சேர்ந்த ரயில் நிலையத்திலிருந்து, அதனைப் பெறும் வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கே கொண்டு விநியோகம் செய்யும் பணியை இந்திய தபால் துறை மேற்கொள்ள உள்ளது.
- இந்த கூட்டு பார்சல் விநியோக சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் 3-ம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- பார்சலைப் பெற்றுக் கொண்டது முதல் அதை விநியோகம் செய்யும் வரை வாடிக்கையாளருக்கான தொடர்பு அலுவலகமாக இந்திய தபால் அலுவலகம் இருக்கும்.