பாலிஸ்டிக் ரக பிருதிவ் -2 ஏவுகணை சோதனை வெற்றி
- பாலிஸ்டிக் ரக பிருதிவ்-2 ஏவுகணை குறுகிய தூரத்தை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த ஏவுகணை ஒடிசாவில் சண்டிப்பூர் ஏவுதளத்தில் இருந்து இன்று (ஜன.10) இரவு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது குறிப்பிட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழித்தது.
ஸ்டார்ட்அப் இந்தியா புதுமை வாரம் நாடு முழுவதும் தொடங்கம்
- தேசிய ஸ்டார்ட்அப் தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் ஸ்டார்ட்அப் இந்தியா புதுமை வார கொண்டாட்டங்கள் இன்று தொடங்கின.
- 7 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடைபெற்றன.
- தில்லி விஞ்ஞான் பவனில் தொழில் மற்றும் உள்நாட்டு வணிக ஊக்குவிப்பு துறை (டிபிஐஐடி) சார்பில் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வதற்கான மாற்று முதலீட்டு நிதியம் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது.
- இதில் சிறு தொழில் மேம்பாட்டு வங்கி, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ஹைதராபாத், மும்பை, வாரங்கல் உள்ளிட்ட நகரங்களிலும் ஸ்டார்ட்அப் புதுமை வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- கோவை, வேளாண் வணிக தொழில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி தொடங்கிவைத்தார்.
- இதில் 120 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் வேளாண் கல்வி பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் ராகேஷ் சந்திரா தலைமை விருந்தினராக இதில் பங்கேற்றார்.
- இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள், மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.