உன்னை காணும் அந்த
சில நொடிகளுக்காக
பல மணி நேரம் காத்திருக்கும்
அந்த நேரத்திற்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
காதலின் உயரம்.
இன்னும் எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை
காதலிக்க தேடி வருவேன்.
இதயம் துடிப்பது சாதாரண
விடயமாக இருக்கலாம்
ஆனால் என் இதயம் துடிப்பது
உனக்காக மட்டுமே..!
நீ அழகாக இருந்தால் தான்
உன்னை விரும்புவேன்
என்பதல்ல காதல் நீ எப்படி
இருந்தாலும் உன்னை
மட்டும் தான் விரும்புவேன்
என்பதே உண்மை காதல்.
மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்.
மீண்டும் ஒரு பிறவி என்று
இருந்தால் அதிலும் நீ தான்
என் காதலாக வேண்டும்.
என் காதலுக்கு உரியவளே
உன் முகத்தை பார்த்தால்
போதும் வலிகளை கூட
சுகமாக உணர்ந்திடுவேன்.
உன் முகம் காண
காத்திருப்பதும்
ஒரு சுகம் தான்.
காதலில் சிறு பிரிவும்
பெரிய சண்டைகளும்
வருவது ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்வதற்கே..!
இதை புரிந்து
கொண்டவர்களுக்கு பிரிவு
என்பது இல்லை..!
என் தாயாக உன்னை
நினைக்கிறன் காதலியாக
அல்ல..! என் தாயின்
அன்பும் அரவணைப்பும்
உன்னிடத்தில் கண்டேன்..!
என்னை அறியாமல் உன்
மீது அளவு கடந்த பாசத்தை
வைத்து விட்டேன்..! அதனால்
தான் உன் சிறு மாற்றங்கள்
கூட என்னை அதிகம்
காயப்படுத்துகின்றது..!
தட்டி விடவும் தோளில்
தட்டிக் கொடுக்கவும்
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் என்னை
கட்டி அணைத்து அன்பு
செலுத்த உள்ள உறவு
நீ மட்டும் தான்.
போதைப் பழக்கம்
இல்லாத நான்
தினம் தினம்
போதையாகிறேன்
உன் விழிகளை
காணும் போது.
காதல் கவிதைகள்
எதற்கு என் காதலே
கவிதையாக அமைந்து
விட்ட பிறகு..!
இரவில் உறக்கம் என்னை
ஆட்சி செய்ய என்
உறக்கத்தை ஆட்சி
செய்கிறது உன் கனவுகள்..!
அழகு எனும் சொல்லிற்கு
உண்மையான அர்த்தத்தை
உணர்த்தியவள் நீ தான்..!
அழகு என்பது உண்மையான
அன்பு என்று எனக்கு புரிய
வைத்தவள் நீ தான்…!
கவிதைகள் போல
இதமான மன
உணர்வைவையும் மன
நிறைவையும் தருபவை
உன் காதல் தான்…!
முகம் காணாமல் இருந்தாலும்
உன் குரல் கேட்காமல்
இருந்தாலும் என் அன்பிற்கும்
காதலிற்கும் உரித்தானவள்
நீ ஒருத்தி மட்டும் தான்
என்பதை நினைவில்
வைத்துக் கொள்.
துடிக்கும் இதயம் கூட
நின்று போகலாம் ஆனால்
நின்ற இதயம் கூட மீண்டும்
துடிக்கும் உன் அழகான
நினைவுகள் என் இதயத்தில்
பதிந்திருப்பதால்..!
நொடிக்கு நொடி மூச்சுக்
காற்று போல என்
இதயத்தை உரசி செல்கிறது
உன் நினைவுகள்..!
Tamil kathal kavithaigal la inu diffrent words use panuga spelling correct panuga
ReplyDelete