ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் - 5வது இடத்திற்கு முன்னேறிய கோலி
- திருவனந்தபுரத்தில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் டாப் ஐந்து வீரர்களில் ஒருவராக அவர் இணைந்தார்.
- கடந்த 2008 முதல் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோலி விளையாடி வருகிறார். மொத்தம் 259 இன்னிங்ஸில் 12,754 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 64 அரைசதம் மற்றும் 46 சதங்கள் அடங்கும். திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிராக 63 ரன்கள் கடந்த போது இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.
- முன்னதாக, ஐந்தாவது இடத்தில் 12,650 ரன்களுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே இருந்தார். அவரைதான் கோலி இப்போது முந்தியுள்ளார். இது தவிர சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதங்கள், இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 10 சதங்கள் போன்ற சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
- செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- இந்த ரயில் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். மேலும், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதலாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.
- இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், கிஷன் ரெட்டி, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இது இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். இதன் மூலம் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் பயண நேரம் பன்னிரண்டரை மணி நேரத்திலிருந்து எட்டரை மணி நேரமாகக் குறையும்.
- உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலின் பெட்டிகள் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளன. இது ரயில் பயணிகளுக்கு வேகமான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும்.
- வந்தே பாரத் விரைவு ரயிலின் அறிமுகம் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், வசதியான மற்றும் வேகமான பயண முறையை வழங்கவும் உதவும். இந்த ரயில் புறப்பட்ட 52 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதோடு, அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்வது போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
- இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
- இதன் மூலம் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
- இந்தியா vs இலங்கை - 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - 2023
- நியூஸிலாந்து vs அயர்லாந்து - 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி - 2008
- ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் - 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி - 2015
- தென் ஆப்பிரிக்கா vs ஜிம்பாப்வே - 272 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி - 2010
- தென் ஆப்பிரிக்கா vs இலங்கை - 258 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி - 2012
- இந்தியா vs பெர்முடா - 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - 2007
- பிரபஞ்ச அழகிக்கான போட்டி அமெரிக்காவின் லுாசியானா மாகாணம் நியூ ஓர்லியான்சில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த திவிதா ராய் உட்பட 20 பேர் பங்கேற்றனர்.
- இதில் பிலிப்பைன்சை பூர்விகமாக உடைய அமெரிக்க அழகி ரபோனி கேப்ரியல் முதலிடத்தைப் பிடித்தார். வெனிசுலா மற்றும் டொமினிக்கன் குடியரசின் அழகிகள் அதற்கடுத்த இடங்களைப் பிடித்தனர்.
- கடைசி 10 பேரில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் திவிதா ராய் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார். கடந்தாண்டு பிரபஞ்ச அழகியான இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து புதிய பிரபஞ்ச அழகி கேப்ரியலுக்கு கிரீடம் அணிவித்தார்.