Type Here to Get Search Results !

2023ம் ஆண்டு சென்று பார்க்கத்தக்க 52 தலைசிறந்த சுற்றுலாத் தலங்கலின் பட்டியல் / LIST OF 52 TOP TOURIST SPOTS TO VISIT IN 2023


TAMIL
  • வருடா வருடம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தலைசிறந்த சுற்றுலாத் தலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். கடந்து ஆண்டு 50 முக்கிய இடங்களை நியூயார்க் டைம்ஸ் பரிந்துரை செய்திருந்தது. 
  • அதில் கேரளாவும் இடம் பெற்றிருந்தது. அதேபோல இந்த ஆண்டும் 52 தலைசிறந்த இடங்களை நியூயார்க் டைம்ஸ் பரிந்துரை செய்துள்ளது.
  • 'கடவுளின் சொந்த நகரம்' என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடையது. கடற்கரைகள், படகு வீடு, மலைப் பிரதேசங்கள், தேயிலை தோட்டங்கள் என கண்ணை கவரும் வகையில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
  • இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்த ஆண்டு சென்று பார்க்கத்தக்க 52 தலைசிறந்த சுற்றுலாத் தலங்கலின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கேரள மாநிலம் 13வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து கேரளா மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  •  கேரளாவைத் தவிர, லண்டன், ஜப்பானின் மோரியோகா, ஸ்காட்லாந்தின் கில்மார்ட்டின் க்ளென், நியூசிலாந்தின் ஆக்லாந்து, கலிபோர்னியாவில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ், ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவு, அல்பேனியாவின் ஸ்ஜோசா நதி மற்றும் நார்வேயின் ட்ரொம்சோ ஆகிய இடங்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
  • சுற்றுலாப் பயணிகள் கிராமிய வாழ்க்கையை உணர்ந்து கொள்ளும் விதமாக கேரள அரசு முன்னெடுத்துள்ள முயற்சிகளை நியூயார்க் டைம்ஸ் பாராட்டியுள்ளது. 
  • மேலும் கேரளாவைப் பற்றி குறிப்பிடும்போது குமரகம் மற்றும் மறவந்துருத் போன்ற இடங்களைப் பற்றியும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
  • குமரகம் என்பது கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமம் அதன் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைக்கு பெயர் பெற்றது. தென்னை நாரிலிருந்து கயிறுகளை நெசவு செய்வது, கால்வாய்கள் வழியாக துடுப்பு போடுவது, பனை மரத்தில் ஏறுவது போன்ற பல்வேறு கிராம வாழ்க்கையின் அனுபவங்களை அங்கே சுற்றுலாப் பயணிகள் செய்து பார்க்கலாம்.
  • மறவந்துருத் எனும் கிராமத்தில் சுற்றுலாப் பயணிகள் கிராமிய தெருக் கலை மற்றும் பாரம்பரிய கோவில் நடனம் போன்ற நிகழ்வுகளை ரசிக்க முடியும் என்று நியூயார்க் டைம்ஸ் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ENGLISH
  • Every year, the New York Times publishes a list of top tourist destinations. The New York Times recommended 50 places to visit last year. Kerala was also included in it. Similarly, New York Times has recommended 52 best places this year.
  • Known as the 'God's own city', the state of Kerala is blessed with scenic beauty. There are many tourist attractions such as beaches, houseboats, hilly areas and tea plantations.
  • The New York Times has published a list of 52 top tourist attractions to visit this year. The state of Kerala has been ranked 13th. Kerala is the only one from India to feature in this list.
  • Apart from Kerala, London, Japan's Morioka, Scotland's Kilmartin Glen, New Zealand's Auckland, California's Palm Springs, Australia's Kangaroo Island, Albania's Sjosa River and Norway's Tromsø also feature in the list.
  • The New York Times has praised the Kerala government's efforts to make tourists feel the rural life. And while mentioning Kerala the New York Times also mentions places like Kumarakam and Maravanthuruth.
  • Kumaragam is a small village in Kerala known for its scenic beaches. Tourists can experience various village life experiences there, such as weaving ropes from coir, paddling through canals, climbing palm trees.
  • The New York Times underlines that tourists can enjoy events such as village street art and traditional temple dances in Maravanthuruth village.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel