Type Here to Get Search Results !

டிஜிட்டல் வங்கி அலகுகள் / DIGITAL BANKING UNITS


TAMIL
  • கடந்த அக்டோபர் 16ம் தேதி, நாட்டின் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதார பாதையில், இந்த முயற்சி முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
  • இந்தியா போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஏழை எளிய மக்கள் அணுகும் வகையில் வங்கி அமைப்புகள் இருப்பது அவசிமாகிறது. 
  • 2015ல் மத்திய அரசு வங்கிக் கணக்கு- ஆதார்- கைபேசி எண் (JAM) என்ற முத்தரப்பு இணைப்பை மேற்கொண்டது. இதன்கீழ், அரசு மானியங்கள், வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • மேலும், பொருளாதாரத்தை முறைபடுத்தும் விதமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்தது. 
  • உதாரணமாக, கடந்த 2018-19 நிதியாண்டில் மின்னணுப் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை (Number of Digital Transaction) 3,134 கோடியாக இருந்த நிலையில், 2020-21 நிதியாண்டில் 5,554 கோடியாகவும், 2021- 22 நிதியாண்டில் 7422 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
  • எனவே, இந்த டிஜிட்டல் பொருதாரத்தில் வங்கி அமைப்புகளின் பங்களிப்பை அதிகரிக்கும் விதமாக தற்போது டிஜிட்டல் வங்கி அலகுகள் துவங்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் வங்கி அலகுகளின் பணிகள் என்ன? 
  • 90களில் www இணையதள வசதிகளை மூளை முடுக்குகளுக்கு சென்று சேர்த்த பெருமை ப்ரௌசிங் சென்டருக்கு உண்டு. அதேபோல், நாட்டின் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு டிஜிட்டல் சேவைகளை இந்த வகை வங்கிகள் கொண்டு செல்ல இருக்கின்றன. நாட்டின் அனைத்து வர்த்தக வங்கி (Scheduled Commercial Banks) இந்த டிஜிட்டல் வங்கி அலகுகளை துவங்கலாம்.
  • டிஜிட்டல் வங்கிப் அலகுகள் (DBUS) சிறப்பான நிலையான வங்கிப் பிரிவுகள் ஆகும்.
  • சொந்தமாக கணினி, மடிக்கணினி அல்லது திறனறி பேசி (ஸ்மார்ட்போன்) இல்லாதவர்கள், டிஜிட்டல் வங்கி அலகுகளுக்குச் செல்வதன் மூலம் டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பெறலாம்.
  • சேமிப்புக் கணக்கைத் தொடங்கவும், பணப் பரிமாற்றம் செய்யவும், நிலையான வைப்பு நிதி முதலீடு செய்யவும், கடன் பெற விண்ணப்பிக்கவும், வழங்கப்பட்ட காசோலைகளுக்குப் பணம் செலுத்துவதை நிறுத்தவும், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கவும், கணக்கு விபரங்களைச் சரிபார்க்கவும் உதவும். கணக்குகளைப் பார்த்தல், வரி செலுத்துதல், கட்டணம் செலுத்துதல் மற்றும் பரிந்துரை செய்தல் போன்ற பல்வேறு சேவைகள் இங்கே கிடைக்கும்.
  • இது இணையப் பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்குக் கற்பிப்பதில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படும்.
  • டிஜிட்டல் நிதி பற்றி கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • On October 16, Prime Minister Narendra Modi inaugurated 75 digital banking units in 75 districts of the country. The initiative is seen as a major milestone in the country's digital economy journey.
  • In developing countries like India, it is necessary to have banking systems accessible to the poor. In 2015, the central government implemented a three-way linkage of Bank Account-Aadhaar-Mobile Number (JAM). Under this, government grants and bank loans are being provided.
  • It also demonetized Rs 500 and Rs 1000 notes to formalize the economy and promote digital transactions.
  • For example, in the last financial year 2018-19 the number of electronic money transactions (Number of Digital Transaction) was 3,134 crore, in the financial year 2020-21 it has increased to 5,554 crore and in the financial year 2021-22 it has increased to 7422 crore.
  • Therefore, digital banking units have now been started to increase the contribution of banking systems in this digital economy.
What are the functions of digital banking units?
  • Browsing Center has the honor of adding www facilities to brain accelerators in the 90s. Likewise, these types of banks are meant to bring digital services to people living in remote areas of the country. All Scheduled Commercial Banks of the country can start these digital banking units.
  • Digital Banking Units (DBUS) are the best standard banking units.
  • People who do not own a computer, laptop or smart phone can avail digital banking services by visiting digital banking units.
  • Help you open a savings account, make money transfers, invest in fixed deposits, apply for loans, stop payments on issued cheques, apply for credit or debit cards, and verify account details. Various services like account viewing, tax payment, bill payment and referral are available here.
  • It will work with an emphasis on educating customers about cyber security, awareness and security measures.
  • It is said to encourage learning about digital finance.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel