Type Here to Get Search Results !

உலக தொழுநோய் ஒழிப்பு தினம் 2024 / WORLD LEPROSY DAY 2024

 • உலக தொழுநோய் ஒழிப்பு தினம் 2024 / ANTI LEPROSY DAY 2024: தொழு நோய் இந்த வார்த்தையை கேட்கும் போதே துர்நாற்றம் வீசுவதைபோல பெரும்பாலானோர் அஞ்சுகின்றனர். தொழுநோய் உலகளவில் பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது.
 • தொழு நோய் இல்லாத இந்தியாவே தேச தந்தை அண்ணல் காந்தியடிகளின் கனவாக இருந்தது. அதற்காக அவர் தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.
 • அதனால் தான் உலக முழுவதும் ஜனவரியின் கடைசி ஞாயிறு தொழுநோய் ஒழிப்பு தினமாக முன்னெடுக்கபட்ட போதிலும் இந்தியா முழுவதும் காந்தியின் நினைவு நாள் அன்று, அவர் தொழுநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வந்ததை நினைவு கூறும் வகையில் ஜனவரி மாதம் 30 அன்று தேசிய தொழு நோய் ஒழுப்பு தினமாக கடைப்பிடிக்க படுகிறது.
 • அன்னை தெரஸா இந்தியாவில் தொழு நோய் பாதிக்கப்பட்டவர்கள் படும் துயரங்களை கண்டே இந்தியாவில் தங்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டாற்றியது குறிப்பிடத்தக்கது.

தொழு நோய்

 • உலக தொழுநோய் ஒழிப்பு தினம் 2024 / ANTI LEPROSY DAY 2024: தொழு நோய் என்பது மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியாவால் உண்டானது. 1873-ல் டாக்டர் கெரார்ட் ஹேன்சன் இந்த நோயை கண்டறிந்ததால் இதை ஹேன்சன் நோய் என்றும் அழைக்கின்றனர். மேலும் குட்டம், குஷ்ட நோய், பெரு வியாதி மேக நீர், மேக நோய் என்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
 • எம்.லெப்ரே மிக மெதுவாக பெருக கூடியது. இதனால் உடலில் தொற்று ஏற்பட்டு குறைந்தது 5 ஆண்டுகள் கடந்த பின்னரே நோய்கான அறிகுறிகள் தென்படும். இந்த நோயின் தொற்று முதலில் தோல் பகுதிகளை பாதித்து நரம்புகளை அழிக்கிறது.
 • ஆரம்ப கட்டத்தில் சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்வு அற்ற தேமல்கள் அறிகுறிகள் உண்டாகும். அந்த தேமல்கள் மீது வியர்வை இருக்காது. முடி இருக்காது. நரம்புகள் புடைத்து பாதிப்பு ஏற்படும் போது கை விரல் மடங்கி செயல் இலக்கிறது. 
 • உள்ளங்கை மற்றும் பாதங்களில் உணர்வு அற்று போவதால் சூடு மற்றும் வேலை செய்யும் போது தோல் மீதான கூடுதல் அழுத்தம் புண்களை ஏற்படுத்துகிறது.
 • தொடுதல் மற்றும் வலி உணர்வு இழப்புகள் கடுமையான காயங்களுக்கு வழி வகுக்கிறது. இமை பலவீனம் மற்றும் கண்ணின் ஒளி குறைவு பார்வை இழப்பை உண்டாக்குகிறது.
 • தொழு நோயாளி மற்றொருவரைத் தொடுவதன் மூலம் இந்நோய் பரவாது. மோசமான சுகாதார நிலையில் வாழ்பவர்களுக்கே இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக இருமல் மற்றும் தும்மல் மூலம் மைக்கோபாக்டீரியம் லெப்ரே பரவுகிறது. 
 • மேலும் பாலியல் தொடர்பு, கர்ப்பம் மூலமாகவும் பரவுகிறது. பெரும்பாலும் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது தொழுநோய் பாதிப்புள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு இயல்பான குழந்தைப்பேறும் ஆரோக்கியமான குழந்தைகளும் பிறக்கின்றன. 
 • தொழு நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடல் உறுப்புகள் செயலற்று போகும் நிலை ஏற்படுவதில்லை. ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் சில தோல் படைகளைத் தவிர வேறு எந்த வெளிப்படையான அறிகுறிகளும் ஏற்படாமல் தடுக்க முடியும்
 • இந்நிலையில் தான் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள Multi-Drug Therapy (MDT) மூலம் தொழுநோய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் (NLEP)

 • உலக தொழுநோய் ஒழிப்பு தினம் 2024 / ANTI LEPROSY DAY 2024: தொழுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் 1955 ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இதையடுத்து 1982-ல் பன் மருந்து சிகிச்சை அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர் 1983-ல் இத்திட்டம் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டமாக மாற்றப்பட்டது. இந்நாட்டில் இருந்து தொழுநோயை ஒழிப்பது அதன் நோக்கமாக மாறியது.
 • 2005-ல் தேசிய அளவில் தொழுநோய் ஒழிப்பு முறை நிறைவேற்றப்பட்டது எனினும், உலகத் தொழுநோயாளர்களில் 57% இந்தியாவிலேயே இருக்கின்றனர். மார்ச் 2017 கணக்கெடுப்பின் படி 682 மாவட்டங்களில் 554 மாவட்டங்கள் தொழுநோய் ஒழிப்பை வெற்றிகரமாக எய்தி விட்டது.
 • ஆரம்ப நோய் கண்டறிதலும் சிகிச்சையுமே நோய் ஒழிப்பிற்கு ஆதாரம். ஆரம்ப நோய் கண்டறிதலால் தொற்று குறைக்கப்பட்டு பரவல் தடுக்கப்படும். நோய் கண்டறிதலில் ஆஷாவினர் ஈடுபட்டுள்ளனர். 
 • அவர்களுக்கு ஊக்க ஊதியமும் அளிக்கப்படுகிறது. அதேபோல் தொழுநோய் ஊனமுற்றோரை தமிழ்நாடு அரசு கண்டறிந்து மாற்றுத்திறனாளிகள் வாரியத்தில் இணைத்து மாதந்தோறும் ரூபாய் 2000 ஆயுள் முழுவதும் வழங்குகிறது. 
 • தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மறுவாழ்வு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை மற்றும் பல பயிற்சி வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு அருகே மத்திய அரசின் தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.
 • தொழுநோயாளிகளுக்கு சரியான சிகிச்சையும், சமூக ஆதரவும் இருந்தால் அவர்களும் இப்பூவுலகில் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை.

உலக தொழுநோய் தினம் (WLD) 2024 தீம்

 • உலக தொழுநோய் ஒழிப்பு தினம் 2024 / ANTI LEPROSY DAY 2024: உலக தொழுநோய் தினம் (WLD) 2024 தீம் "தொழுநோயை வெல்லுங்கள்". இந்த தீம் அன்றைய இரட்டை நோக்கங்களை உள்ளடக்கியது: தொழுநோயுடன் தொடர்புடைய களங்கத்தை அகற்றுவது மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணியத்தை மேம்படுத்துவது.
 • தொழுநோயை அகற்றுவதற்கான மருத்துவ முயற்சிகளுடன், தொழுநோயின் சமூக மற்றும் உளவியல் அம்சங்களையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை "பீட் லெப்ரஸி" என்ற தீம் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது. 
 • தொழுநோய் இனி களங்கமாக இல்லாத ஒரு உலகத்திற்கு அது அழைப்பு விடுக்கிறது, மாறாக அனைத்து தனிநபர்களிடமும் இரக்கத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகும்.

உலக தொழுநோய் தின தீம் / கருப்பொருள் 2023

 • உலக தொழுநோய் ஒழிப்பு தினம் 2024 / ANTI LEPROSY DAY 2024: 2023 ஆம் ஆண்டில், உலக தொழுநோய் தினம் ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை. இந்த சர்வதேச தினம் தொழுநோயை அனுபவித்த மக்களைக் கொண்டாடுவதற்கும், நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தொழுநோய் தொடர்பான களங்கம் மற்றும் பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும்.
 • 2023 உலக தொழுநோய் தினத்தின் கருப்பொருள் இப்போதே செயல்படுங்கள். தொழுநோய்க்கு முடிவு கட்டுங்கள். இந்த வருடத்தின் கருப்பொருள் மூன்று முக்கிய செய்திகளுக்கு கவனம் செலுத்துகிறது:

ENGLISH

 • ANTI LEPROSY DAY 2024: Leprosy is the word most people fear when they hear the stench. Leprosy has existed worldwide since ancient times. A leprosy-free India was the dream of Father of the Nation Annal Gandhi. He continued to strive for it.
 • That is why, although the last Sunday of January is promoted as Leprosy Eradication Day all over the world, on Gandhi's memorial day, January 30 is observed as National Leprosy Eradication Day to commemorate his service to the people suffering from leprosy.
 • It is noteworthy that Mother Teresa stayed in India after seeing the sufferings of leprosy sufferers in India and did charity for the leprosy sufferers. 
 • Leprosy is caused by the bacterium Mycobacterium leprae. It is also known as Hansen's disease because it was diagnosed by Dr. Gerard Hansen in 1873. It is also known by many names like Kuttam, Kushta Noya, Peru Vyaita Megha Nei, Megha Noya.

Leprosy
 • ANTI LEPROSY DAY 2024: M. leprae grows very slowly. Due to this, the symptoms of the disease appear only after at least 5 years have passed after the infection in the body. The infection of this disease first affects the skin areas and destroys the nerves.
 • Early symptoms include red or scaly rash. No sweat on those patches. No hair. When the nerves are affected and the fingers are bent, the action is aimed. Loss of sensation in palms.. and feet due to heat and extra pressure on skin during work causes sores.
 • Losses of touch and pain sensation lead to severe injuries. Weakness of the eyelid and lack of light in the eye causes vision loss. The disease is not spread by touching another person with leprosy. 
 • The disease is likely to occur in people living in poor health conditions. Mycobacterium leprae is usually spread through coughing and sneezing. Also transmitted through sexual contact, pregnancy. 
 • Pregnant women with leprosy often give birth to normal and healthy babies when properly treated. Not all leprosy sufferers develop organ failure. Proper treatment at an early stage can prevent any visible symptoms other than some skin rashes
 • In this case, the medical treatment of leprosy is given through Multi-Drug Therapy (MDT) recommended by the World Health Organization.

National Leprosy Eradication Program (NLEP)

 • ANTI LEPROSY DAY 2024: The Leprosy Control Program was started in 1955 by the Government of India. Subsequently, in 1982, multidrug therapy was introduced, and in 1983, the program was transformed into the National Leprosy Eradication Program. Its mission became to eradicate leprosy from this country.
 • Although a national leprosy eradication program was achieved in 2005, India accounts for 57% of the world's leprosy cases. According to the March 2017 survey, 554 districts out of 682 districts have successfully eradicated leprosy.
 • Early diagnosis and treatment are key to cure. Early detection can reduce infection and prevent spread. Ashas are involved in diagnosis. 
 • They are also given incentives. Likewise, Tamil Nadu government identifies leprosy disabled persons and joins them in the Board of Disabled Persons and provides Rs 2000 per month for life. 
 • Accommodation in rehabilitation homes at various places in Tamilnadu and treatment and many trainings are provided. Central Government Leprosy Research Institute is functioning near Chengalpattu.
 • It is a proven fact that with proper treatment and social support, lepers can live a normal life in this world.

World Leprosy Day (WLD) 2024 Theme

 • ANTI LEPROSY DAY 2024: World Leprosy Day (WLD) 2024 Theme is “Beat Leprosy”. This theme encapsulates the dual objectives of the day: to eradicate the stigma associated with leprosy and to promote the dignity of people affected by the disease.
 • The theme of “Beat Leprosy” serves as a powerful reminder of the need to address the social and psychological aspects of leprosy, alongside the medical efforts to eliminate the disease. 
 • It calls for a world where leprosy is no longer a source of stigma but rather an opportunity to demonstrate compassion and respect for all individuals.

World Leprosy Day Theme 2023

 • ANTI LEPROSY DAY 2024: In 2023, World Leprosy Day is Last Sunday of January. This international day is an opportunity to celebrate people who have experienced leprosy, raise awareness of the disease, and call for an end to leprosy-related stigma and discrimination.
 • The theme of World Leprosy Day 2023 is “Act Now. End Leprosy.” This year's theme calls attention to three key messages:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel