
28th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
புவனேஸ்வரில் 'உத்கர்ஷ் ஒடிசா' – மேக் இன் ஒடிசா மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் "செழிப்பான ஒடிசா-ஒடிசாவில் தயாரிங்கள்" (உத்கர்ஷ் ஒடிசா – மேக் இன் ஒடிசா) மாநாடு 2025 மற்றும் ஒடிசாவில் தயாரியுங்கள் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- வளமான ஒடிசா – ஒடிசாவில் தயாரிப்போம் -2025 மாநாடு என்பது ஒரு முதன்மை உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாடு ஆகும். இது ஒடிசா அரசால் நடத்தப்படுகிறது.
- இது கிழக்குப் பிராந்தியத் தொலைநோக்கில், இந்தியாவின் முன்னணி முதலீட்டு இலக்கு மற்றும் தொழில்துறை மையமாக மாநிலத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- துடிப்பான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் மாநிலத்தின் சாதனைகளை எடுத்துரைக்கும் ஒடிசாவில் தயாரிப்போம் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு ஜனவரி 28 முதல் 29 வரை இரண்டு நாட்கள் நடைபெறும்.
- தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒடிசா ஒரு விருப்பமான முதலீட்டு இடமாக வழங்கும் வாய்ப்புகளை ஒன்றிணைத்து விவாதிக்க இது ஒரு தளமாக செயல்படும்
- இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்தோனேசிய கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இடையிலான, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
- புதுதில்லியில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தில் ஜனவரி 27ம் தேதி நடைபெற்ற 2-வது உயர்மட்ட கூட்டத்தின் போது, ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
- புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளின் கீழ் 2025 ஜனவரி 24 முதல் 28 வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்துள்ள எட்டு பேர் கொண்ட குழுவுடன், இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் பரமேஷ் சிவமணி மற்றும் இந்தோனேஷிய கடலோர காவல்படையின் தலைவர் வைஸ் அட்மிரல் இர்வன்சியா ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
- 2024-ம் ஆண்டு கிரிக்கெட்டில் தலைசிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கிவருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி.
- அந்தவகையில் சிறந்த டெஸ்ட், ஒடிஐ மற்றும் டி20 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகள், வளர்ந்துவரும் வீரர்களுக்கான விருதுகள், துணை வீரர்களுக்கான விருதுகள் மற்றும் ஆண்டின் சிறந்த அம்பயர் முதலிய விருதுகளை அறிவித்துவருகிறது.
- இந்நிலையில் இந்திய அணியிலிருந்து சிறந்த டி20 ஆண்கள் கிரிக்கெட்டராக அர்ஷ்தீப் சிங்கும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டராக ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த ஒருநாள் பெண்கள் கிரிக்கெட்டராக ஸ்மிரிதி மந்தனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- இதனைத்தொடர்ந்து இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது ஜஸ்பிரித் பும்ராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐசிசியின் சிறந்த விருதாக பார்க்கப்படும் ஒரு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் டிரோபியை 2024-ம் ஆண்டுக்காக பும்ரா வென்றுள்ளார். இந்த விருதை இதுவரை 4 இந்திய வீரர்கள் மட்டுமே வென்றுள்ளனர்.
- முதல்முதலில் சர் கார்பீல்ட் டிரோபியை வென்றவர் ராகுல்டிராவிட் 2004-ம் ஆண்டு வென்றார். அதற்குபிறகு சச்சின் டெண்டுல்கர் 2010-ம் ஆண்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2016-ம் ஆண்டும், விராட் கோலி 2017 மற்றும் 2018 என இரண்டு வருடங்களில் வென்றிருந்தார்.
- இந்த சாம்பியன் கிரிக்கெட்டர்களான 4 வீரர்களுக்கு பிறகு ஐந்தாவது இந்திய வீரராக ஜஸ்பிரித் பும்ரா 'சர் கார்பீல்ட் டிரோபி' வென்று மகுடம் சூடியுள்ளார்.
- உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- பிரதமர் மோடி, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் பிற முக்கிய தலைவர்கள் முன்னிலையில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் தேசிய விளையாட்டு ஜோதியை ஏந்திச் சென்றார்.
- தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் பிராந்தியத்தில் புத்தொழில்களுக்கான ஒத்துழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ஜம்மு காஷ்மீர் கனெக்ட்" என்ற சிறப்பு புத்தொழில் மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- சந்தை இணைப்புகள், நிதி நெட்வொர்க்குகள் மற்றும் சர்வதேச விரிவாக்க வாய்ப்புகள் ஆகியவற்றில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது. இது 2047க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பார்வையுடன் ஒத்துப்போகிறது.