- தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தற்போது மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி - IC பணி) பணியிடங்கள் 11 காலியாக உள்ளன. இந்த பதவியில் புதிய நபர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
- 2023 ஜனவரி 13ம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இணைய வழி விண்ணப்ப திருத்தம் செய்ய 2023 ஜனவரி 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மேற்கொள்ளலாம்.
- இதற்கான முதல்நிலைத் தேர்வு 2023 ஏப்ரல் 9ம் தேதி காலை 9.30மணி முதல் பிற்பகல் 12.30 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
- ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அ), மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர் மரபினர், பிற்பட்ட வகுப்பினர் (இஅ), பிற்பட்ட வகுப்பினர் (இ) மற்றும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் இந்த பணிக்கு இந்த பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை.
- மற்றவர்கள் 32வயதை நிறைவு பெற்றிருக்க கூடாது. ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் 42 வயது நிறைவு பெற்றிருக்க கூடாது.
- 2022 டிசம்பர் 14ம் தேதி அன்றுள்ளபடி, பல்காலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் மூலம் பெறப்பட்ட ஏதாவது ஒரு முதுநிலைப்பட்டம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பெற்றிருக்க வேண்டும்.
- பட்டதாரி அல்லது பிஎட் படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் தங்கள் இடைநிலைக் கல்வி, பியுசி, பிளஸ் 2 அல்லது இதற்கு இணையான கல்வித்தகுதி, இவற்றில் ஏதேனும் ஒன்றில் தமிழை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- முதல்நிலைத் தேர்வுகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், சிதம்பரம், வேலூர், ராமநாதபுரம், நாகர்கோயில், காஞ்சிபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
- இது குறித்து கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.