Type Here to Get Search Results !

TNPSC 15th DECEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

5,500 கி.மீ. தொலைவு சீறிப் பாயும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

  • கடந்த 2012, 2013, 2015-ம் ஆண்டுகளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த வரிசையில் ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் அக்னி 5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது 5,500 கி.மீ. தொலைவு சீறிப் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கி தகர்த்தது.
  • இந்த ஏவுகணை மூலம் சீன தலைநகர் பெய்ஜிங் மீது எளிதாக தாக்குதல் நடத்தலாம். 17.5 மீட்டர் நீளம், 2 மீட்டர் விட்டம்கொண்ட அக்னி 5 ஏவுகணை 50,000 கிலோ எடை கொண்டதாகும். 
  • மணிக்கு 29,401 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 1,100 கிலோ எடை வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து செல்லும். இந்த ஏவுகணை 8,000 கி.மீ. வரை சீறிப்பாயும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்திய விமானப் படையிடம் 36-வது ரஃபேல் போர் விமானம் ஒப்படைப்பு
  • பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
  • அதில் முதல்கட்டமாக கடந்த 2020-ம் ஆண்டு, ஜூலையில் 5 விமானங்கள் அம்பாலா விமானப் படைதளத்துக்கு வந்து சேர்ந்தன. அதன்பிறகு படிப்படியாக 30 விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு ரஃபேல் விமானத்தை மட்டும் பிரான்ஸ் வழங்க வேண்டியிருந்தது. தற்போது அந்த விமானமும் இந்தியாவை வந்தடைந்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவு
  • பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு மற்றும் பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் உள்ளிட்ட முக்கிய இரு நிகழ்வுகள் இந்தியாவின் தலைமையின்கீழ் நடைபெறுகிறது. 
  • சா்வதேச பாதுகாப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் குறித்த விவாதம் பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தலைமையில் நடைபெற்றது.
  • இந்த விவாதத்தின்போது பேசிய ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதா் நிக்கோலஸ் டிரிவியா் ஜொமனி, பிரேஸில், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு பிரான்ஸ் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தாா். 
தமிழ்நாடு சீறுடை பணியாளர் தேர்வாணையத்தின் டி.ஜி.பி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு
  • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வானையத்தின் டிஜிபியாக பணியாற்றி வருபவர் சீமா அகர்வால். அவருக்கு கூடுதல் பொறுப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • மேலும் தீயணைப்புத்துறை டிஜிபியாக பதவி வகித்த பிரஜ் கிஷோர் ரவி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் - மக்களவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றம்
  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்.14-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளர்களிடம் பேசியிருந்த மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா, தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரை சேர்க்க அனுமதி வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் மசோதா வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 
  • இந்த மசோதாவுக்கு மக்களவையில் அரசியல் வேறுபாடுகள் கடந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவளித்த நிலையில், இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
  • அடுத்தக்கட்டமாக இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.
டபிள்யுடிஏ 2022ம் ஆண்டின் சிறந்த வீராங்கனை 
  • ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் சிறந்த டென்னிஸ் வீரா், வீராங்கனைகளுக்கு டபிள்யுடிஏ, ஏடிபி சாா்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். 
  • இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோவு செய்யப்பட்டுள்ளாா். 
  • கடந்த 2020-இல் புதிய அறிமுக வீராங்கனை விருதைப் பெற்றிருந்தாா் ஸ்வியாடெக். தொடா்ந்து 37 போட்டிகளில் வென்று 8 போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றாா்.
  • இதில் இரண்டு கிராண்ட்ஸ்லாம், டபிள்யுடிஏ 1000, 500 பட்டங்கள் அடங்கும். 
  • சிறந்த இரட்டையா் விருதுக்கு பாா்பரா கிரெஜிசிகோவா, கேத்ரீனா சினியகோவா தோவு தோவு செய்யப்பட்டனா். செக். குடியரசைச் சோந்த இந்த ஜோடி ஆஸி.
  • சிறந்த வளரும் வீராங்கனையாக பிரேசிலின் பீட்ரீஸ் ஹடாட் மயா, புதிய வீராங்கனையாக சீனாவின் ஸெங் குன்வென் உள்ளிட்டோா் தோவு செய்யப்பட்டுள்ளனா். ஜெஸிக்கா பெகுலா பயிற்சியாளா் டேவிட் விட் சிறந்த பயிற்சியாளராக தோவு பெற்றாா்.
சூர்ய கிரண் - XVI கூட்டு ராணுவப் பயிற்சி
  • இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான “சூர்ய கிரண்” 16-வது முறையாக நேபாள ராணுவப் போர்ப் பள்ளி அமைந்துள்ள சல்ஜாண்டியில், 2022 டிசம்பர் 16  முதல் டிசம்பர் 29 டிசம்பர் 2022 வரை நடைபெறவுள்ளது. 
  • “சூர்ய கிரண்” பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தியாவும் நேபாளமும் காடு மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து பயிற்சி மேற்கொள்கின்றன.
  • நேபாளத்தின் ஸ்ரீ பவானி பக்ஷ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களும், இந்தியாவின் 5-வது  கோர்க்கா ரைபிள் படைப்பிரிவினரும் இந்த கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இரண்டு ராணுவங்களும் தங்களது அனுபவங்களை இந்த பயிற்சியின் போது பகிர்ந்துகொள்ளும்.
  • தீவிரவாதத் தடுப்பு,  பேரிடர் நிவாரணப் பணிகளின் போது மனிதாபிமான நடவடிவக்கைகள் போன்றவற்றில் இரு நாடுகளும்  அனுபவங்களை பகிர்ந்துகொள்வதுடன், இணைந்து செயல்படும் நோக்கில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel