- ஒரு ஆண்டின் சிறந்த சொல்லை கடந்த பனிரெண்டு மாதங்களின் மனநிலை மற்றும் எண்ணங்கள் பிரதிபலிக்கும் நோக்கத்தைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு நடந்த வாக்கெடுப்பில் மெட்டாவெர்ஸ் (Metaverse), ஐஸ்டாண்ட்வித் (IStandWith), கோப்லின் மோட் (GoblinMode) போன்ற மூன்று வார்த்தைகள் கொடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் டிச. 2ம் தேதிவரை ஆன்லைனில் நடந்த வாக்கெடுப்பில் 93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
- இதில் 'கோப்லின் மோட்' என்ற வார்த்தை சுமார் 3.40 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக வேக்ஸ்(VaX) தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 'கோப்லின் மோட்' என்பது பொதுவாக உள்ள விதிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தனிநபர் அவரவர் விருப்பமானவற்றை எல்லாம் செய்தல், தன் நலன் சார்ந்து சிந்தித்தல், சுயவிருப்பம், குற்றவுணர்வு இல்லாமல், பேராசையுடன் நடந்து கொள்ளுதல் இவை அனைத்தும் இந்த வார்த்தையில் அடங்கியுள்ளன. முக்கியமாக வீட்டை அலங்கோலமாக்கி, சோம்பேறித்தனமாக வாழ்பவர்களின் மனப்பான்மையை குறிக்கிறது.
ரெப்போ விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பு
- இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்ட முடிவுகளை மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
- நடப்பு நிதியாண்டில் 8 மாதங்களில், 5 வது முறையாக ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை அடுத்து, இனி வங்கிகளில் கடனுக்கான வட்டியும், தவணையும் மேலும் உயரும் இனி ரெப்போ ரேட் 5.90 சதவீதத்திலிருந்து, 6.25 சதவீகிதமாக உயர்கிறது.
2022 ஆம் ஆண்டுக்கான உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் - மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்
- 2022 ஆம் ஆண்டுக்கான உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கொலம்பியாவின் பொகோடாவில் நடந்து வருகிறது. இதில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு களமாடி இருந்தார்.
- தனது முழுத் திறனையும் வெளிப்படுத்திய அவர் மொத்தம் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். இந்த பிரிவில் மற்றொரு சீன வீரரான ஜியாங் ஹுய்ஹுவா, (206 கிலோ) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி
- தலைநகர் டெல்லியில் 3 மாநகராட்சிகளும், மொத்தம் 272 வார்டுகளும் இருந்தன. இந்நிலையில் 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன்படி வார்டுகளும் 250 ஆக சுருக்கப்பட்டன.
- இந்த நிலையில், 250 வார்டுகளுக்கான டில்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. அதில், 50.47 சதவீத ஓட்டுகளே பதிவானது.
- இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று (டிச.7-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது.
- 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 வார்டுகளில் வெற்றி, பாஜக 104 வார்டுகளில் வெற்றி, காங்கிரஸ் 7 வார்டுகளில் வெற்றியும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தனர்.
- இதன்மூலம், கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை தன்வசம் வைத்திருந்த பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மி முதன்முறையாக கைப்பற்றியது.
கின்னஸ் சாதனை படைத்த நாக்பூர் மேம்பாலம்
- மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கட்டமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலம் அதன் மேல் மெட்ரோ ரயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
- இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற நிலையில் இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார் .
உச்சநீதிமன்றத்திற்கு புதிய செயலி அறிமுகம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
- உச்சநீதிமன்றத்திற்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்த செயலியை supreme court mobile app 2.0 என்ற பெயரில் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கும்.
- அரசு சார்ந்த துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால்மார்ட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய சிறுதொழில் கழகம் கையெழுத்து
- தேசிய சிறுதொழில் கழகத்திற்கும் (என்எஸ்ஐசி) வால்மார்ட் குளோபல் சோர்சிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 6-ந் தேதி கையெழுத்தானது. என்எஸ்ஐசி-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு கௌரங் தீட்சித், வால்மார்ட் இயக்குனர் திருமிகு பிரமீளா மல்லையா ஆகியோர் மத்திய குறு சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் என்எஸ்ஐசி தனது திட்டங்கள் மற்றும் சேவைகளை, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்கும் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கமுடியும்.
- மேலும் எம்எஸ்எம்இக்கள் தொழில் நடுத்த தேவையான மூலதன நிதி, மொத்தக் கொள்முதல் ஆதரவு ஆகியவற்றையும் பெற முடியும்.
- 2030-ம் ஆண்டு வாக்கில் எம்எஸ்எம்இக்கள் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை மேற்கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும்.