Type Here to Get Search Results !

டிஜிட்டல் சமத்துவமின்மை ஆய்வு குறித்த ஆக்ஸ்ஃபாம் இந்தியா அறிக்கை 2022 / OXFAM INDIA REPORT ON DIGITAL INEQUALITY 2022

TAMIL

  • பாலினம், சாதி, பொருளாதாரம், வாழக்கூடிய பகுதி என்று இந்தியாவில் டிஜிட்டல் சமத்துவமின்மை நிலவுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
  • வெளியான இந்த அறிக்கை, டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான அணுகல் பெரும்பான்மையாக ஆண்களிடமும் நகர்ப்புறம், மேல்-சாதி, உயர் வர்க்கத்தின் கைகளிடமும் இருப்பதாகக் கூறுகிறது.
  • "பொதுப் பிரிவைச் சேர்ந்த 8 சதவீதம் பேரிடம் ஒரு கணினியோ மடிக்கணினியோ இருக்கிறது. ஆனால், 1% பட்டியல் பழங்குடியினரிடமும் 2% பட்டியல் சாதியினரிடமும் தான் அவை இருக்கின்றன.
  • கைபேசி மற்றும் கைபேசி இணையத்தைப் பொறுத்தவரை, 2021ஆம் ஆண்டில் ஆண்களோடு ஒப்பிடுகையில் 33% குறைவாகவே பெண்கள் பயன்படுத்தியுள்ளனர்
  • இந்த அறிக்கைப்படி, வேலையின்மையும் டிஜிட்டல் சமத்துவமின்மையில் பங்களிக்கிறது. பணி நிலைமையைப் பொறுத்து நிரந்தரமாகச் சம்பளம் பெறும் 95 சதவீதம் பேர் சொந்தமாகக் கைபேசி வைத்திருக்கின்றனர்.
  • ஆனால், வேலை தேடிக் கொண்டிருக்கும் வேலையின்மையால் அவதிப்படும் 50 சதவீதம் பேரிடம் மட்டுமே சொந்தமாகக் கைபேசி உள்ளது.
  • இந்த அறிக்கைப்படி, கிராமப்புற மக்கள் தொகையில் 31 சதவீதம் பேரிடம் தான் இணையத்திற்கான அணுகல் உள்ளது.  ஆனால், நகர்ப்புற மக்கள் தொகையில் 67 சதவீதம் பேரிடம் இணைய அணுகல் உள்ளது. 
  • இந்த டிஜிட்டல் சமத்துவமின்மை கல்வி, சுகாதாரம், தனிநபர் பொருளாதாரம் ஆகிய முக்கியமான மூன்று துறைகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
  • கல்வித்துறையைப் பொறுத்தவரை, பேரிடர் காலகட்டத்தில் இணையவழிக் கல்வி மிகவும் பிரபலமானது. ஆனால், 9 சதவீதம் மாணவர்களிடம் தான் இணைய வசதியுடனான கணினியை அணுகுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. 
  • மேலும் 25 சதவீதம் மாணவர்களிடம் மட்டுமே ஏதாவதொரு கருவியின் மூலம் இணைய வசதியைப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
  • ஏழ்மையான 20% குடும்பங்களில், 2.7 சதவீதம் குடும்பத்திற்கே கணினி அணுகலும் 8.9 சதவீத இணைய அணுகலுமே உள்ளதாக இந்திய புள்ளியியல் துறையின் 2017-18 தரவுகளை மேற்கோள் காட்டி அறிக்கை கூறுகிறது.
  • மேலும், அதற்கு மாறாக பொருளாதாரரீதியாக முதல் 20 சதவீதத்திற்குள் இருக்கும் குடும்பங்களில் 27.6% பேர் கணினி அணுகலையும் 50.5% பேர் இணைய அணுகலையும் கொண்டுள்ளனர்.
  • மாணவர்களில், பணக்காரர்களான 10% பிரிவைச் சேர்ந்த 41% பேர் இணைய வசதியுடன் கூடிய கணினியைக் கொண்டுள்ளனர் என்றும் அதற்கு அடுத்தபடியாக இருக்கும் 10% பணக்கார மாணவர்களிடையே 16% பேரிடம் கணினி மற்றும் இணைய வசதியைக் கொண்டுள்ளனர் என்றும் அறிக்கை கூறுகிறது.
  • இதுவே 10% ஏழை மாணவர்களிடையே 2% பேர் மட்டுமே இணைய சேவைகளுடனான கணினியைக் கொண்டுள்ளனர். மேலும், 75% பெற்றோர்களும் 84% ஆசிரியர்களும் டிஜிட்டல் கல்விமுறையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.
ENGLISH
  • The report states that digital inequality exists in India on the basis of gender, caste, economy and living space. The report states that access to digital technologies is predominantly in the hands of men and the urban, upper-caste and upper class.
  • 8 per cent of the general category own a computer or laptop, but only 1% of scheduled tribes and 2% of scheduled castes have them. In 2021, women used 33% less mobile phones and mobile internet compared to men.
  • According to the report, unemployment also contributes to digital inequality. 95 percent of permanent salaried people own a mobile phone depending on the work situation. But only 50 percent of unemployed jobseekers own a mobile phone.
  • According to the report, only 31 percent of the rural population has access to the Internet. But 67 percent of the urban population has internet access. This digital inequality affects three important sectors: education, health, and the personal economy.
  • As for the education sector, e-learning is very popular during the disaster period. However, the report states that only 9 percent of students have access to a computer with internet access. And only 25 percent students have access to internet through any device.
  • Among the poorest 20% of households, 2.7 percent have computer access and 8.9 percent have Internet access, the report said, citing 2017-18 data from Statistics India. Also, in contrast, 27.6% of households in the top 20 percent economically have access to a computer and 50.5% have access to the Internet.
  • Among students, 41% of the richest 10% have access to a computer with internet access, while 16% of students in the next richest 10% have access to both a computer and the internet, the report said.
  • This means that among the 10% poorest students only 2% have a computer with internet services. Also, 75% of parents and 84% of teachers face various challenges in digital education.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel