இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் 2022
- இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் புதுடில்லியில் நடந்தது.
- நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர்.
- துர்க்மெனிஸ்தான் சார்பில் இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதர் பங்கேற்றார். பயங்கரவாதத்தை தடுக்க கூட்டாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- கடந்த அக்டோபரில், உலக வங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என, அதற்கு முன் கணித்திருந்த 7.5 சதவீதத்திலிருந்து குறைத்து அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 6.5 சதவீதத்திலிருந்து, 6.9 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.
- உலகளாவிய பொருளாதார பாதிப்புகளிலில் இருந்து மீட்சியடைவது மற்றும் எதிர்பார்த்ததை விட இரண்டாவது காலாண்டில் அதிக வளர்ச்சி ஆகியவை காரணமாக, இந்தத் திருத்தத்தை மேற்கொண்டிருப்பதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.
- உலக கொந்தளிப்புகளுக்கு மத்தியில், ஒரு சர்வதேச நிறுவனம், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை மாற்றி உயர்த்தி அறிவித்துள்ளது, இதுவே முதல் முறையாகும்.
- 'பிட்ச் ரேட்டிங்ஸ்' நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பில் மாற்றம் எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு நிறைவு, பன்னாட்டு சுகாதார மாநாடு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நடந்தது.
- மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, சர்வதேச மாநாட்டை துவக்கி வைத்தார். பின்னர், மருத்துவத்துறையின் நூற்றாண்டு அஞ்சல் தலை மற்றும் கொரோனா தொற்று சிறப்பு காணொலி குறுந்தகட்டினை வெளியிட்டார்.
- இந்தோனேஷியா ஒரு சர்ச்சைக்குரிய புதிய குற்றவியல் சட்டத்தை இயற்றியுள்ளது, அதில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் சேர்ந்து வாழ்வதை சட்டவிரோதமாக அறிவித்துள்ளது.
- புதிய சட்டங்கள் இந்தோனேசியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இருவருக்கும் பொருந்தும் என்று அந்நாட்டு அரசு குறிப்பிபட்டுள்ளது. பாராளுமன்றத்தால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட புதிய குற்றவியல் சட்டம், 1946 இல் இந்தோனேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைமுறையில் இருந்த கட்டமைப்பை மாற்றி அமைப்பதாக உள்ளது.
- முன்மொழியப்பட்ட புதிய சட்டம் 2019 செப்டம்பரில் ஒரு முழு வரைவு வெளியிடப்பட்டபோது மாணவர்கள் தலைமையிலான குழு அதை எதிர்த்து போராடியது.
- இது தனிப்பட்ட சுதந்திரங்களைக் குறைக்கும் என்றும் குறிப்பிட்டது. அந்த போராட்டத்தில் குறைந்தது 300 பேர் காயமடைந்தனர். பின்னர் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்ட வரைவு தற்போது சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
- சா்வதேச பாட்மின்டன் சம்மேளனத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த பாரா பாட்மின்டன் வீராங்கனை விருதை இந்தியாவின் மனீஷா ராமதாஸ் வென்றுள்ளாா்.
- 17 வயதான மனீஷா, நடப்பாண்டில் அனைத்து போட்டிகளிலுமாக 11 தங்கம், 5 வெண்கலம் என 16 பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறாா். இதில் உலக சாம்பியன்ஷிப்பில் எஸ்யு5 பிரிவில் வாகை சூடியதும் அடக்கம். இந்த விருதுக்கான போட்டியில் மற்ற இந்திய வீராங்கனைகளான நித்யஸ்ரீ சுமதி, மானசி ஜோஷி ஆகியோரும் இருந்தனா்.
- சிறந்த பாரா வீரா் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்தும் போட்டியில் இருந்த நிலையில், அந்த விருது டபிள்யூஹெச்2 உலக சாம்பியனும், நடப்பு பாராலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் டாய்கி கஜிவாராவுக்கு கிடைத்தது.
- மாற்றுதிறனாளிகள் அல்லாத சாதாரண போட்டியாளா்கள் பிரிவில் ஆடவா் தரப்பில் ஒலிம்பிக் சாம்பியனும், டென்மாா்க் வீரருமான விக்டா் அக்ஸெல்சென் சிறந்த வீரா் விருது பெற்றாா்.
- அதற்கான போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் பெயரும் இருந்தது. சிறந்த வீராங்கனை விருதை ஜப்பானின் அகேன் யமகுச்சி வென்றாா்.
- இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி 2021 நவம்பரில் 67.94 மில்லியன் டன்னாக இருந்ததுடன் ஒப்பிடும்போது, 2022 நவம்பரில் 11.66% அதிகரித்து 75.87 மில்லியன் டன்னாக இருந்தது.
- நிலக்கரி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி 2022 நவம்பரில் இந்திய நிலக்கரி நிறுவனம் 12.82% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது, அதேசமயம் சிங்கரேணி கூலரீஸ் கம்பெனி நிறுவனமும் மற்ற சுரங்கங்களும் முறையே 7.84% 6.87% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
- நிலக்கரி உற்பத்தியில் முதன்மையான 37 சுரங்கங்களில் 24 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்தன. ஐந்து சுரங்கங்களின் உற்பத்தி 80 முதல் 100 சதவீதம் வரை இருந்தது.
- மின்சார உற்பத்திப் பயபாட்டுக்கு அனுப்பப்படுவதில் கடந்த ஆண்டு 60.20 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும் போது, நவம்பர் 2022ல் 3.55% அதிகரித்து 62.34 மில்லியன் டன்னாக உள்ளது.
- நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நவம்பர் 2021 உடன் ஒப்பிடும்போது நவம்பர் 2022ல் 16.28% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் நவம்பர் 2021ல் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விட நவம்பர் 2022ல் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 14.63% அதிகமாக உள்ளது.
- மத்திய அரசின் கட்டணமில்லா தொலை மருத்துவம் சேவையான இ-சஞ்சீவனி, குறிப்பிடத்தக்க சாதனையாக, 8 கோடி தொலைத்தொடர்புகளைக் கடந்து வியக்கத்தக்க வகையில் மற்றொரு மைல்கல்லைத் தாண்டியுள்ளது.
- கடைசி 1 கோடி ஆலோசனைகள் குறிப்பிடத்தக்க காலக்கெடுவில் சுமார் 5 வாரங்களில் பதிவு செய்யப்பட்டவை. இது டெலிமெடிசின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது.
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இ-ஹெல்த் முன்முயற்சியான, இ-சஞ்சீவனி ஒரு தேசிய டெலிமெடிசின் சேவையாகும். இது வழக்கமான நேரடி உடல்நல ஆலோசனைகளுக்கு மாற்றாக இணையதளம் வழியாக ஆலோசனை வழங்க முயற்சிக்கிறது.
- இந்த முன்முயற்சி, 3 ஆண்டுகளுக்குள், உலகின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான டெலிமெடிசின் தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது இரண்டு சிறப்பங்களைக் கொண்டுள்ளது.
- ஒன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நோயாளிகளை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது. மற்றொன்று தேசத்தின் தொலைதூர பகுதிகளில் அதன் இருப்பை உணர்த்துகிறது.
- இ-சஞ்சீவனி புறநோயாளி பிரிவு, 2,22,026 நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் 1,144 இணையதளப் புறநோயாளி பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்தத் தளம் ஒரே நாளில் 4.34 லட்சம் நோயாளிகளுக்கு சேவைசெய்து சாதனை படைத்துள்ளது.
- இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் பத்து மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் (28242880), மேற்கு வங்கம் (10005725), கர்நாடகா (9446699), தமிழ்நாடு (8723333), மகாராஷ்டிரா (4070430), உத்தரப் பிரதேசம் (3763092), மத்தியப் பிரதேசம் (3283607), பீகார் (2624482), தெலங்கானா (2452529), குஜராத் (1673888).